வாசகர்கள் கருத்துகள் ( 3 )
வாழ்த்துக்கள். கொஞ்சம் ஹெட் வெயிட்டை இறக்கிவைத்துவிட்டு ஆடவும். கண்டிப்பாக தொடரை நீங்கள் வெல்வீர்கள். All the best.
முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14-18. இரண்டாம் டெஸ்ட் போட்டி நவம்பர் 22-26.
வெற்றிபெற வாழ்த்துக்கள்.
மும்பை: தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி கடைசியாக வெஸ்ட் இண்டீக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்திய அணி அசத்தியது. அடுத்தாக, இந்திய அணிக்கு எதிராக தென்னாப்ரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் வரும் நவ.,14ம் தேதியும், 2வது டெஸ்ட் போட்டி நவ.,22ம் தேதி நடக்கின்றன. இந்த நிலையில், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இதில், காயத்தினால் விலகியிருந்த ரிஷப் பன்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கில் தலைமையிலான முழு அணியின் விபரம் பின்வருமாறு;கில் (கேப்டன்)ரிஷப் பன்ட் (துணை கேப்டன்)ஜெய்ஸ்வால்கேஎல் ராகுல்சாய் சுதர்சன்தேவ்தட் படிக்கல்துருவ் ஜூரேல்ரவீந்திர ஜடேஜா வாஷிங்டன் சுந்தர்பும்ராஅக்ஷர் படேல்நிதிஷ்குமார் ரெட்டிமுகமது சிராஜ்குல்தீப் யாதவ்ஆகாஷ் தீப், ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேபோல, தென்னாப்ரிக்கா ஏ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. திலக் வர்மா தலைமையிலான அணியின் முழு விபரம்;திலக் வர்மா (கேப்டன்)ருதுராஜ் கெயிக்வாட் (துணை கேப்டன்)அபிஷேக் ஷர்மாரியான் பராக்இஷான் கிஷான்ஆயுஷ் பதோனிநிஷாந்த் சிந்துவிப்ராஜ் நிகம்மனவ் சுதர்ஹர்ஷித் ரானாஅர்ஷ்தீப் சிங்பிரசித் கிருஷ்ணாகலீல் அகமதுபிரப்சிம்ரன் சிங், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வாழ்த்துக்கள். கொஞ்சம் ஹெட் வெயிட்டை இறக்கிவைத்துவிட்டு ஆடவும். கண்டிப்பாக தொடரை நீங்கள் வெல்வீர்கள். All the best.
முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14-18. இரண்டாம் டெஸ்ட் போட்டி நவம்பர் 22-26.
வெற்றிபெற வாழ்த்துக்கள்.