உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முழு தகவல் தெரியாமல் பேசக் கூடாது; ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி

முழு தகவல் தெரியாமல் பேசக் கூடாது; ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இண்டிகோ விமான சேவைகள் ரத்து விவகாரத்தில் முழு தகவல் தெரியாமல் பேசக்கூடாது என்று காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது; இது ஒரு அரசியல் விவகாரம் அல்ல, பொதுப் பிரச்னை. ஒப்பந்த செலவுகளைக் குறைத்து, அதிக விமானங்களை அனுமதிக்கும் வகையில் சட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். போட்டி அதிகரிக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறிக் கொண்டே இருக்கிறேன். நாட்டில் விமானப் போக்குவரத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இந்தத் துறையில் மக்கள் நுழைவதற்கு வாய்ப்புகள் உருவாகின்றன. அரசும் அதையேத்தான் விரும்புகிறது. முழு தகவல் தெரிந்தால் மட்டும் அவர் (ராகுல்) பேசுவது நல்லது, இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, ஊழியர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 6 நாட்களாக இண்டிகோ விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசின் மீது குறை கூறிய காங்கிரஸ் எம்பி ராகுல், 'இண்டிகோ விமான நிறுவனத்தின் தோல்விக்கு காரணமே மத்திய அரசின் அணுகுமுறையே காரணம். விமானங்களின் ரத்து, தாமதம் மற்றும் உதவியில்லாத நிலையால், சாதாரண இந்திய மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அனைத்து துறைகளிலும் நியாயமான போட்டிக்கு இந்தியா தகுதியுடையது,' இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Rajasekar Jayaraman
டிச 07, 2025 20:11

பிறவிகுணமே புறம் பேசுவதும் பொய் பேசுவதும் தான்.


HoneyBee
டிச 07, 2025 18:25

எல்லாம் கப்சா தான். பொய் சொல்லி விட்டு மறுபடியும் ரிவர்ஸ் அடிக்கிறார்.


Venkat esh
டிச 07, 2025 16:47

என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் தன் தகப்பனின் தாய் நாட்டுக்கு துரோகம் செய்கிறோம் என்று தெரிந்தே அரசியல் நடத்தி கவனம் பெற முயலும் அந்த ஆளுக்கு யார் புரியவைக்க முடியும்?


Perumal
டிச 07, 2025 15:30

ஸ்ரீலங்கா தாய்லாந்து மற்றும் மேற்குலக நாடுகள் அனைத்தும் நடத்தும் விமான தொழில் தனியார்தான் நடத்துகின்றனர், In this Srilankan Airlines Air craft owned by Government, but run by private company in the name of Srilanka Airlines


Indian
டிச 07, 2025 15:23

இந்த நாட்டில் ஒருத்தனும் தொழில் செய்ய முடியாது . ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் அழிஞ்சு போச்சு . இப்போ இண்டிகோ வும் அந்த நிலையில் வந்து நிற்கிறது .


vivek
டிச 07, 2025 16:40

எல்லாவற்றிற்கும் காங்கிரஸ் தான் காரணம் கைலாசம்


Srprd
டிச 07, 2025 14:16

Rahul Gandhi is right.


montelukast sodium
டிச 07, 2025 13:38

ஸ்ரீலங்கா குட்டி நாடு தாய்லாந்து குட்டி நாடு சொந்தமாக விமான சர்வீஸ் வைத்துள்ளது ஆனால் இந்தியா சொந்தமான விமான சர்வீஸ் கிடையாது தனியாருக்கு விற்று விட்டார்கள் இப்படித்தான் இருக்கும்


ஆரூர் ரங்
டிச 07, 2025 14:00

வணிகம் செய்வது அரசின் வேலையல்ல. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது கூறியது. ஏர் இந்தியா அரசால் நடத்தப்பட்ட போது அதன் லட்சம் கோடி நஷ்டம் ஏழை மக்களின் தலைகளில் கட்டப்பட்டது.


G Mahalingam
டிச 07, 2025 14:37

காரணம் தெரியாமல் பேச கூடாது. ஏர் இந்தியா விமானம் காங்கிரஸ் ஆட்சியில் பணம் வாங்கி கொண்டு கீழ் நிலை ஊழியர்கள் பலரை சேர்த்து கொண்டார்கள். ஒரு விமானத்திற்கு 100 பேர் என்ற‌ விதத்தில் இருந்தார்கள்.‌‌. மத்திய அரசிடம் இருந்த போது‌‌ஒரு நாளைக்கு 10 கோடி நஷ்டமாக இருந்தது.‌‌ தொழிலாளர் சங்கம் போராட்டம்.


Suppan
டிச 07, 2025 16:06

ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்ற காரணமே பல வருடங்களாக நஷ்டம்தான் . காங்கிரஸ் ஆண்ட கால த்திலும் விற்க முயற்சி செய்து பார்த்தார்கள். முடியவில்லை. அமெரிக்க அரசுக்கே சொந்த விமான எவை கிடையாது என்று தெரியுமா ? பல ஆப்பிரிக்க ஆடுகளுக்கும் சொந்த விமான சேவை கிடையாது.


vivek
டிச 08, 2025 02:58

jeddha வில் உனக்கு சொந்தமாக ஒட்டகம் இருக்கிறதா


montelukast sodium
டிச 07, 2025 13:38

பாவம் பயணிகள். மக்கள் பலமுறை சிந்தித்து நாட்டிற்கு நல்லது செய்யும் மனிதர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். மாறாக இலவசங்களுக்கு ஏமாந்து கொள்ளையடிப்பவர் களுக்கு வாக்களிக்கக் கூடாது.


Gokul Krishnan
டிச 07, 2025 13:21

5 நாட்களுக்கு மேலாக அரசுக்கு தண்ணீர் காட்டும் இண்டிகோ


Ramesh Sargam
டிச 07, 2025 13:18

ராகுலுக்கு அரசியல் செய்யக்கூட முழு அரசியல் அறிவு இல்லை. ஏதோ தமிழ் நாட்டு துணை முதல்வர் உதயநிதி மாதிரி வாரிசு அடைப்படையில் அரசியலில் நுழைந்தவர் இந்த ராகுல். அவ்வளவுதான். அப்படிப்பட்டவர்களிடம் விவாதம் செய்வதே நமது தவறு.


Indian
டிச 07, 2025 15:25

யார்க்கு முழு அரசியல் அறிவு இருக்கு அந்த ஆளை சொல்லு ??.


vivek
டிச 07, 2025 19:58

உனக்கு ஐந்து அறிவு என்பது தெரிகிறது