உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயணிக்கு அசுத்தமான இருக்கை: இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்

பயணிக்கு அசுத்தமான இருக்கை: இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அஜர்பைஜானில் இருந்து டில்லி வந்த போது பயணிக்கு அசுத்தமான, கறைபடிந்த இருக்கை வழங்கியதற்காக இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.பிங்கி என்ற பெண், கடந்த ஜன., 2ம் தேதி அஜர்பைஜானின் பகு நகரில் இருந்து டில்லிக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். அப்போது தனக்கு , அசுத்தமான மற்றும் கறைபடிந்த இருக்கை வழங்கப்பட்டதாகவும், தனது புகார் புறக்கணிக்கப்பட்டது, சரியாக விசாரிக்கப்படவில்லை எனக்கூறி டில்லியில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பாயம் கமிஷனில் புகார் அளித்து இருந்தார்.இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் அளித்த விளக்கத்தில், ' பிங்கி புகார் தெரிவித்ததும் அவருக்கு வேறு இருக்கை ஒதுக்கப்பட்டது. அதில் அவர் பயணம் செய்தார்,' எனத் தெரிவித்து இருந்தது.இதனை விசாரித்த கமிஷன் தலைவர் பூனம் சவுத்ரி, உறுப்பினர்கள் பாரிக் அஹமது மற்றும் சேகர் சந்திர ஆகியோர் கொண்ட அமர்வு, பிங்கியின் புகாருக்கு ஆதாரம் உள்ளது எனக்கூறி, இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் வழக்கு செலவாக ரூ.25 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ