உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேனிலவுக்கு சென்ற இடத்தில் புது மாப்பிள்ளை கொலை: புது மணப்பெண் உட்பட 4 பேர் கைது

தேனிலவுக்கு சென்ற இடத்தில் புது மாப்பிள்ளை கொலை: புது மணப்பெண் உட்பட 4 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: தேனிலவுக்கு மேகாலயா சென்றபோது, புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், புது மணப்பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.மத்திய பிரதேசத்தின் இந்துாரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி, 30. இவரது மனைவி சோனம், 27; திருமணமாகி எட்டு நாட்களே ஆன புதுமண தம்பதி, தேனிலவுக்காக வடகிழக்கு மாநிலமான மேகாலயா சென்றனர். அங்கு கிழக்கு காசி மலை மாவட்டத்தில், தொடர்மழை பெய்யும் சிரபுஞ்சிக்கு சென்றனர். அங்குள்ள நான்கிரியாட் கிராமத்தில் விடுதியில் தங்கி தேனிலவை கொண்டாடினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5pf7dc27&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அங்கு வாடகை ஸ்கூட்டரில் மே 23ல் வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் விடுதி திரும்பவில்லை. அவர்களின், 'அலைபேசி சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தால், இருவரையும் தேடும் பணியை போலீசார் மேற்கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து, 20 கி.மீ.,தொலைவில் சோஹ்ரா பகுதி அருவிக்கரையில், ராஜா உடல் பாதி சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. தொடர்ந்து அவரது மனைவி சோனத்தை போலீசார் தேடினர்.இதையடுத்து ராஜாவின் கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா என உறவினர்கள் உறுதி செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து பெண்ணின் வெள்ளை சட்டை, உடைந்த அலைபேசி மீட்கப்பட்டுள்ளதால், ராஜாவை கொன்ற கும்பல் சோனத்தை கடத்திச் சென்றார்களா என போலீசார் விசாரித்தனர்.புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் மேகாலயா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்த மாநிலத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை தீவிரமாக நடத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கில் மர்மம் விலகியது. கணவரை கொலை செய்ததை மனைவி ஒப்புக்கொண்டார். இறந்தவரின் மனைவி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சோனம் தனது கணவர் ராஜா ரகுவன்ஷியை ஆள் வைத்து கொலை செய்தது விசாரணையில் அம்பலம் ஆனது.

என் மகள் சோனம் அப்பாவி

இது குறித்து சோனம் ரகுவன்ஷியின் தந்தை தேவி சிங் கூறியதாவது: என் மகள் சோனம் அப்பாவி. என் மகள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவளால் இதைச் செய்ய முடியாது. அவள் கணவனை கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. இரு குடும்பங்களின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். மேகாலயா அரசு ஆரம்பத்திலிருந்தே பொய் சொல்லி வருகிறது. என் மகள் நேற்று இரவு காஜிப்பூரில் உள்ள ஒரு தாபாவிற்கு வந்தாள், அவள் தன் சகோதரனை அழைத்தாள். போலீசார் தாபாவிற்குச் சென்றனர், அங்கிருந்து அவள் அழைத்துச் செல்லப்பட்டாள். என் மகளிடம் என்னால் பேச முடியவில்லை. என் மகள் ஏன் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். மேகாலயா போலீசார் பொய் சொல்கின்றனர்.மேகாலயாவில் அவள் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணை கோரி, மத்தியப் பிரதேச முதல்வரை சந்தித்து முறையிடுவோம். மேகாலயா போலீசார் பொய்யான கதைகளை உருவாக்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

என்றும் இந்தியன்
ஜூன் 09, 2025 16:52

அந்த பெண் பார்ப்பதற்கு இவ்வளவு மோசமாக இருக்கின்றாள்??ஏன்???இவளுக்கு இன்னொரு தொடர்பா???அதனால் தான் கணவன் கொலை செய்யப்பட்டானா???


அப்பாவி
ஜூன் 09, 2025 15:22

குழந்தைகளின் சந்தோஷத்தை கருத்தில் கொள்ளாமல் தங்கள் இஷ்டத்துக்கு கலியாணம் செய்து குடுப்பது. மறுத்தால் தற்கொலை செய்து கொள்வோம்னு குழந்தைகளை மிரட்டுவது. குழந்தைகளும் பெற்றவர்களை மதிக்காமல் கண்டவன், தாடி வளர்த்தவனையெல்லாம் காதலிப்பது.... ரெண்டு க்ரூப்புக்கும் புத்தி இல்லை


visu
ஜூன் 09, 2025 15:19

தவறான கருத்துக்கள் அந்த பெண்தான் கொலை செய்தார் என்று நிரூபிக்கப்பட்டு விட்டதா அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள் உடனே அவர் நடத்தை சரியில்லை என்று கருத்துக்கள் .கணவன் இறெந்த பின்னர் 4 நாள் கழித்து மீட்கப்பட்ட சூழலதான் உண்மையை சொல்லும்


வல்லவன்
ஜூன் 09, 2025 14:25

திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பது எவ்வளவோ நல்லது


PRABBHU .V
ஜூன் 09, 2025 14:01

எனக்கு பல வருடங்களுக்கு முன்பு மூணாறில் நடந்த கொலை சம்பவம் தான் ஞாபகத்துக்கு வருகிறது


SUBRAMANIAN P
ஜூன் 09, 2025 13:47

முதல் போட்டோவுல இருக்குற பொம்பளையா அது இரண்டாவது போட்டோவுல இருப்பது? ஆள் அடையாளமே புரியல? அம்புட்டு மேக்கப்பா? அல்லது அடி பலமா தெரியல? ஏதா இருந்தாலும் பேசி முடிவு செய்யுறதை விட்டு ஒரு அப்பாவியா கொலை செய்வாளோ?


Ramesh Sargam
ஜூன் 09, 2025 12:43

மனதுக்கு பிடிக்காத ஒருவனை ஏன் திருமணம் செய்யவேண்டும், பிறகு அவனை ஏன் கொலை செய்யவேண்டும்?


GMM
ஜூன் 09, 2025 12:40

போலீஸ் தகவல் நம்பும்படி இல்லை. அல்லது திராவிட போலீஸ் அறிக்கை போல் உள்ளது. போலீஸ், வக்கீல், அரசியல் வாதிகள் இணைந்து நிர்வாகத்திற்கு வெளியே செயல் பட்டு, யானையை பூனை ஆக்க முடியும். இது திராவிட பெரியார் சிறப்பு கலை, கல்வி முறை. முன் குற்ற இடத்திற்கு போலீஸ் சாட்சி, உள்ளூர் அதிகாரியை கட்டாயம் அழைப்பர். விருப்ப திருமணம். பெண் புது இடத்தில் கூலி படையை நியமிப்பது கடினம்.


Sivak
ஜூன் 09, 2025 16:02

ஆண் புது இடத்தில் கூலி படையை நியமிப்பது சுலபமா?


Rathna
ஜூன் 09, 2025 12:02

என்ன? கள்ள தொடர்புதான் காரணம். வேற என்ன? 5 வருஷத்தில் வெளிய வந்து கள்ள காதலனோடு இன்னொரு திருமணம்?? நல்ல குடும்ப குத்து விளக்கு


Anantharaman Srinivasan
ஜூன் 09, 2025 11:14

Is it preplanned murder for gain..?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை