உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 40 நாட்களுக்கு ஒரு முறை போர்க்கப்பல் அல்லது நீர்மூழ்கி இந்திய கடற்படையில் சேர்ப்பு

40 நாட்களுக்கு ஒரு முறை போர்க்கப்பல் அல்லது நீர்மூழ்கி இந்திய கடற்படையில் சேர்ப்பு

புதுடில்லி:''ஒவ்வொரு, 40 நாட்களுக்கு ஒரு முறை, இந்திய கடற்படையில் புதிதாக ஒரு நீர்மூழ்கி கப்பல் அல்லது போர் கப்பல் சேர்க்கப்படுகிறது,'' என, கடற்படை தளபதி அட்மிரல் திரிபாதி கூறினார். டில்லியில் நடந்து வரும், இந்தியா டிபன்ஸ் கான்கிளேவ் எனும் இந்திய பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பேசிய அட்மிரல் திரிபாதி கூறியதாவது: இந்திய கடற்படையில் வரும், 2035ம் ஆண்டிற்குள், 200 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் இடம்பெறும் வகையில், மும்முரமாக செயல்பட்டு வருகிறோம். பிரதமர் மோடியின் கனவான, 2047 ம் ஆண்டிற்குள், நம் கடற்படை சுயசார்பு நிலையை அடைந்து விடும். அந்த வகையில், வரும் 2025ம் ஆண்டுக்குள், 200க்கும் மேற்பட்ட கப்பல்கள் இணைக்கப்பட்டிருக்கும். இப்போதே நம் கடற்படை வசம், 52 கப்பல்களை கட்டுவதற்கான ஆர்டர்கள் உள்ளன. இப்போது, இந்திய கடற்டையில் 145 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் உள்ளன. நம் நாட்டின் ராணுவ துறை, வெகுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் ராணுவ உற்பத்தி, கடந்த பத்தாண்டுகளில், 1.5 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இவ்வாறு திரிபாதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை