உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இதுதான் தண்டனை; ஜெய்சங்கர் சுளீர்

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இதுதான் தண்டனை; ஜெய்சங்கர் சுளீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்

ராஜ்யசபாவில், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து நடந்த விவாதத்தின் போது, ஜெய்சங்கர் பேசியதாவது: பாஜவின் முந்தைய ஆட்சி காலத்தில் தொடர்ச்சியாக தாக்குதல்கள் சம்பவங்கள் நடந்தன. பயங்கரவாதி தஹாவூர் ராணாவை நாடு கடத்தி அழைத்து வந்த பிரதமர் மோடிக்கு நன்றி.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5dkxm44x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக பாயாது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் பல வழிகளில் மிகவும் தனித்துவமான ஒப்பந்தம். ஒரு நாடு தனது முக்கிய நதிகளை அடுத்த நாட்டிற்கு பாய அனுமதித்த எந்தவொரு ஒப்பந்தத்தையும் நான் நினைத்துப் பார்க்க முடியாது.

நேருவின் தவறுகள்!

எனவே இது ஒரு அசாதாரண ஒப்பந்தம். அதை நாம் நிறுத்தி வைக்கும்போது, இந்த நிகழ்வின் வரலாற்றை நினைவு கூர்வது முக்கியம். நேற்று நான் கேள்விப்பட்டேன், சிலர் வரலாற்று விஷயங்களை மறந்து விட விரும்பு கிறார்கள். ஒருவேளை அது அவர்களுக்குப் பொருந்தாமல் இருக்கலாம், சில விஷயங்களை மட்டுமே நினைவு கூர்கிறார்கள். காங்கிரஸ் பயங்கரவாதத்தை இயல்பாக்கியது. பாகிஸ்தானை பாதிக்கப்பட்டவராக சித்தரித்தது. நேருவின் தவறுகளை சரிசெய்ய முடியாது என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது, ஆனால் பிரதமர் மோடி அதை சரி செய்தார்.

எவ்வளவு காலம்

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், பயங்கரவாதப் பிரச்சினையை உலகளாவிய நிகழ்ச்சி நிரலில் உறுதியாக வைப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆப்பரேஷன் சிந்தூர் தொடங்கியபோது, நிலைமை எவ்வளவு தீவிரமானது.எவ்வளவு காலம் தொடரக்கூடும் என்பதை மதிப்பிடுவதற்காக பல நாடுகள் எங்களைத் தொடர்பு கொண்டன. நாங்கள் அனைவருக்கும் ஒரே செய்தியை தெரிவித்தோம். நாங்கள் எந்த மத்தியஸ்தத்திற்கும் தயாராக இல்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எந்தவொரு விஷயமும் இருதரப்பு ரீதியாக மட்டுமே தீர்க்கப்படும். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜூலை 30, 2025 22:51

அந்த பாகிஸ்தானை ஆதரிக்கும் காங்கிரஸ் போன்றவர்களுக்கு என்ன தண்டனை?


V.Mohan
ஜூலை 30, 2025 21:13

காங்கிரஸ் தலைமை மாறாவிட்டால் அது அறிவு குறைந்த ஆவேசப் பேச்சாளர்களின் கூடாரம் என்பது உலகறிந்த உண்மையாகிவிடும். அதில் அறிவு பூர்வமாக சிந்திக்கும் தலைவர்களோ, நாட்டின் நன்மைக்காக குரலெழுப்புபவர்களோ இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட காஷ்மீர் பண்டிட் இந்துக்களை, கொலை செய்து விரட்டிய முஸ்லீம்களின் "இரத்த சொந்தங்கள்" தான் காங்கிரஸ் தலைமை. நம்நாட்டிற்கு ஏற்பட்ட எல்லா துன்பங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் காங்கிரஸ் தலைமை தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது. பாரதம் விடுதலை பெறும் போது முஸ்லீம்கள் தனி நாடு வேண்டும் என்ற எண்ணத்தில் பாக்கிஸ்தான் பிரிந்தது. அதன் பின்னும் பாக். முஸ்லீம்களின் பேராசை, இந்திய நாட்டை ஆக்கிரமிப்பது தான்.அதற்கு ஒத்துப்போனது, நேரு குடும்பம் தான். கையாலாகாத கயமையில் காஷ்மீரை பாக்கிஸதான் ஆக்கிரமிக்க அனுமதித்தது... காங்கிரஸ் மேலிடம் தான் தேவையற்று பங்களாதேசத்திற்கு சுதந்திரம் பெற்றுத்தந்ததற்கு விலையாக .


Rathna
ஜூலை 30, 2025 16:26

3 லக்ஷம் காஷ்மீரி பண்டிட்கள் தனது நாட்டில் இருந்தே துரத்தப்பட்டபோது போராட்டம் செய்யாதவர்கள், சட்டிஸ்கரில் மதமாற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் போராட்டம் செய்கிறார்கள்? இது தான் இவர்களின் போலி செகுலரிஸ்ம்.


karupanasamy
ஜூலை 30, 2025 15:24

நேருவின் மறைக்க ரோசாப்பூவையும் குழந்தைகள் தினத்தையும் அடிமுட்டாள்தனமாக அரங்கேற்றிவிட்டனர் கயவர்கள்.


Narayanan
ஜூலை 30, 2025 13:55

சபாஷ் ஜெய்ஷங்கர். உண்மையை உணர்த்தியதற்கு . இந்த பிரச்னையை மேலும் பெரிதாக்கவே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியில் இருப்பவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள் . இந்திய நாட்டின் தலைமையுடன் ஒன்றுபட்டு நிற்போம் என்று சொன்னதெல்லாம் காற்றில் விட்ட பட்டம்போல் இருப்பது கூடாது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை