உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்; ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்; ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: உடல்நலக்குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, நேற்று(அக்.,9) இரவு 11.30 மணிக்கு காலமானார்.பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, வயது மூப்பு, ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில், டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.ரத்தன் டாடாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில், ரத்தன் டாடா உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. .தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (அக்.09) இரவு, 11.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கடந்த 1991 மார்ச்சில் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்ற ரத்தன் டாடா, 2012 டிச., 28ல் ஓய்வு பெற்றார். அவரது பதவிக்காலத்தில், டாடா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு அதிகரித்தது. 1991ல் வெறும் 10,000 கோடி ரூபாய் இருந்த விற்றுமுதல், 2011 - 12ல், 100.09 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது. மேலும், ரத்தன் டாடா பொறுப்பில் இருந்தபோது, டெட்லி, கோரஸ், ஜாகுவார் லேண்ட்ரோவர் போன்ற நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டன. இவருக்கு மத்திய அரசு, நாட்டின் உயரிய விருதுகளான, பத்ம பூஷன்(2000) மற்றும் பத்ம விபூஷன்(2008) விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.

பிரதமர் மோடி இரங்கல்

ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தனது பணிவு, இரக்கம், மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவர் ரத்தன் டாடா. அருடைய இழப்பு பேரிழப்பு என்று பிரதமர் மோடி இரங்கல் செய்தியில் தெரிவித்தார். ஜனாதிபதி திரவுபதி முர்முவும், டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.அவரது மறைவுக்கு, கட்சி தலைவர்களும், மாநில முதல்வர்களும், நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜார்கண்ட் அரசு, ஒருநாள் துக்கம் அனுசரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

பெரிய ராசு
அக் 12, 2024 09:54

அன்னாரின் ஆத்ம கைலாசபதியின் திருவடியில் இளைப்பாறட்டும்


SRITHAR MADHAVAN
அக் 10, 2024 13:21

இந்தியா தொழில்துறையின் இதயத்தை இழந்தது


Mahesh Sairam
அக் 10, 2024 10:54

India has lost one of the powerful, simple living giant who has contributed for the growth of our country since independence. The young entrepreneurs should take Ratan Tataji as a role model on all aspects. Om Shanti.


Saai Sundharamurthy AVK
அக் 10, 2024 10:47

ஆழ்ந்த வருத்தங்கள். அவர் மீண்டும் இந்தியாவிலேயே பிறந்து வந்து இந்தியாவுக்காக நிறைய செய்வார் என்று பகவானை பிரார்த்திக்கிறோம். ரத்தன் டாடா ஒரு அருமையான மனிதர். சாதாரண மனிதனின் சிரமங்களை உணர்ந்த ஒரு உயரிய தொழிலதிபர். நம் நாட்டுக்காக நிறைய சேவைகளை செய்த ஒரு தேசபக்தர். இன்னும் நிறைய சொல்லலாம். கண்களில் கண்ணீர் வருகிறது.


N.Chinnachamy
அக் 10, 2024 10:28

உயர்ந்த மனிதர். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்


Arul, Pudhuvai.
அக் 10, 2024 08:40

அன்னாரது ஆன்மா சாந்தியடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்


Mohan
அக் 10, 2024 08:30

பெரிய தொழிலதிபர்களுக்கு முன் உதாரமாக இருந்தவர் ரத்தன் டாடா அவர்கள். மிக தீவிரமான புற்றுநோய் பாதித்தவர்களுக்கு முக்கியமாக ஏழை எளியவர்களுக்கு உதவ மருத்துவமனைகள் கட்டி இலவசமாக மருத்துவம் பெறச்செய்த மகா மனிதர். தள்ளாத வயதிலும் இளைஞர்களை திரட்டி ஆதரவற்ற முதியோர்களுக்கு தாமாக முன்வந்து உதவிகள் செய்யும் அமைப்பை உருவாக்கி பல நல்ல மனம் கொண்ட இளைஞர்களை மனித நேயத்தில் இணைத்தவர். எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். அவரை பின்பற்றி நிறைய படித்த இளைய தலைமுறையினர் மனமுவந்து எளிய வாழ்வு வாழ்கின்றனர். மாற்றத்தை மனமுவந்து ஏற்ற மாமனிதர். இவரைப் போல இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் நம் நாட்டிற்கு நல்லது செய்வார்கள் என்பது உறுதி.


theruvasagan
அக் 10, 2024 08:25

சர்வதேச தரத்துக்கு டாடா குழும நிறுவனங்களை உயர்த்தினார். இந்திய நாட்டில் தொழில் புரட்சிக்கு அடிகோலின அவரது முன்னோர்களுடைய காலடிச் சுவடுகளை பின்பற்றி தரமான தயாரிப்புகளையும் சேவைகளையும் நமது தேசத்துக்கு வழங்கினார். எந்தவித படாடோடபமும் ஆடம்பரமும் இன்றி வாழ்ந்த அபூர்வ மனிதர். அன்னாரது ஆத்மா இறைவன் நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.


raja
அக் 10, 2024 08:18

ஏழைகளும் ஒரு ரூபாய் கொடுத்து விமானத்தில் எரளாம்.. நடுத்தர மக்களும் ரூபாய் ஒரு லட்சத்தில் கார் வாங்கலாம்... தமது சொத்துகளை தனது தொழிலாளிகளுக்கு பகிர்ந்தளித்து சந்தோச பட்டவர்... மாணவர்களுக்கு பல கல்வி உதவி தொகை கொடுத்து கல்வி சேவை செய்தவர்... ஆழ்ந்த அனுதாபங்கள்.. ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிரேன் ..


பெரிய ராசு
அக் 12, 2024 09:55

விடியல் திராவிட விச கும்பலுக்கு இவரது வாழ்க்கை உதாரணம்


surya krishna
அக் 10, 2024 08:15

The great indian industrial legend ever.. Respected Mr. Rattan tata. OM SHANTHI OM.


புதிய வீடியோ