வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Slap Murder Charges & Encounter them. No Mercy
ஜெய்ப்பூர்; ராஜஸ்தான் மாநிலத்தில் ரெய்டின் போது போலீஸ் மிதித்து குழந்தை பலியான சம்பவம் அரங்கேறி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; ஆல்வார் மாவட்டத்தில் நாக்வன் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் சைபர் க்ரைம் மோசடியில் தொடர்புடைய நபரை கைது செய்ய போலீசார் சென்றுள்ளனர்.அப்போது அங்குள்ள கட்டில் ஒன்றில் தாயின் அருகில் உறங்கிக் கொண்டு இருந்த ஒரு மாத பச்சிளம்குழந்தையை போலீசார் மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த குழந்தை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.குழந்தை பலியானதை தொடர்ந்து, ஆத்திரம் கொண்ட ஊர்மக்கள் அதற்கு காரணமான 2 போலீசாரை கைது செய்யக்கோரி, மாவட்ட எஸ்.பி., வீடு முன் போராட்டத்தில் குதித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயரதிகாரிகள் உறுதியை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
Slap Murder Charges & Encounter them. No Mercy