மேலும் செய்திகள்
தேசியம்: பலவீனப்படுத்துகிறது!
21-May-2026
பொருளாதார புயல் நெருங்குவதாக பல முறை எச்சரித்தேன். ஆனால், அப்போது பிரதமர் மோடி தேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்தார். தேர்தல்கள் முடிந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் பட்டன. பணவீக்க மனிதர் மோடியின் ஒரே பணி, தேர்தலில் வாக்குறுதி அளிப்பது; மற்ற நேரங்களில், மக்களின் பணத்தை பறிப்பது. ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ் பலவீனப்படுத்த முயற்சி!
காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், முதிர்ச்சியற்ற, முட்டாள்தனமான கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். இவர், நம் நாட்டை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உலகளவில், எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்த நிலையில், நம் நாட்டில் குறைந்த அளவே அதிகரிக்கப்பட்டுள்ளது. கவுரவ் பாட்டியா செய்தி தொடர்பாளர், பா.ஜ., பெரும் மாற்றம்!
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை நீக்கியதால், வளர்ச்சி பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நம் நாட்டின் சமத்துவமிக்க குடிமக்களாக மாற்றியதன் மூலம், மக்களின் மனநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, மக்களிடையே சுய மரியாதை, லட்சிய உணர்வையும் விதைத்துள்ளது. ஜிதேந்திர சிங் மத்திய அமைச்சர், பா.ஜ.,
21-May-2026