உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பரம்பரை வரி: சாம்பித்ரோடா பேட்டிக்கு பா.ஜ., கடும் கண்டனம்: தனிப்பட்ட கருத்து என காங்., சமாளிப்பு

பரம்பரை வரி: சாம்பித்ரோடா பேட்டிக்கு பா.ஜ., கடும் கண்டனம்: தனிப்பட்ட கருத்து என காங்., சமாளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் சாம் பித்ரோடா, அமெரிக்காவில் விதிக்கப்படும் பரம்பரை வரி குறித்து தெரிவித்த கருத்துக்கு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் விவாதமாகியது. இதனையடுத்து சாம் பித்ரோடாவின் கருத்து, அவரது தனிப்பட்டது என காங்கிரஸ் கூறியுள்ளது.

விவாதம்

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பித்ரோடா டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‛‛அமெரிக்காவில் பரம்பரை வரி என்று ஒன்று இருக்கிறது. ஒருவருக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்துகள் இருந்தால், அதில் அவருடைய வாரிசுகள் 45 சதவீதத்திற்கு மட்டுமே உரிமை கோரி, பெற முடியும். 55 சதவீதத்தை அரசு எடுத்துக் கொள்ளும். இந்தியாவில் அப்படி ஏதும் இல்லை. ஒருவருக்கு ரூ.100 கோடி சொத்து இருந்தால், அத்தனையும் வாரிசுகளுக்கே சென்றடையும். இதுபோன்ற விஷயங்களை விவாதிக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cmnemcgh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கண்டனம்

சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சாம் பித்ரோடாவின் கருத்தை பிரதமர் மோடி கடுமையாக சாடினார். அவர் பேசுகையில், ‛ காங்., அரச குடும்பத்தின் இளவரசரின் ஆலோசகர், நடுத்தர மக்களுக்கு அதிக வரி விதிப்போம் என முன்பு கூறினார். தற்போது அதற்கு ஒரு படி மேலே சென்று பரம்பரை வரி விதிக்கப் போவதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது. பெற்றோர்களிடம் இருந்து பெறும் சொத்துகளுக்கு வரி விதிக்கப் போவதாக கூறுகிறது. இதனால், நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த சொத்து உங்களது குழந்தைகளுக்கு போகாது. அதனை காங்கிரஸ் பறித்துக் கொள்ளும். ‛ மக்கள் வாழும் போதும், இறந்த பிறகும் கொள்ளையடிக்க வேண்டும் ' என்பது தான் காங்கிரசின் தாரக மந்திரம் என்றார்.

அம்பலம்

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: சாம்பித்ரோடாவின் கருத்துக்கு பிறகு காங்கிரஸ் முற்றிலும் அம்பலப்பட்டு விட்டது. முதலில் கணக்கெடுப்பு நடத்துவோம் என அவர்கள் தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தனர். நாட்டின் வளங்களை பகிர்ந்து அளிப்பதில் சிறுபான்மையினருக்கே முன்னுரிமை என மன்மோகன் சிங் கூறி இருக்கிறார். தற்போது அமெரிக்காவில் தனியார் சொத்தில் 55 சதவீதத்தை அரசு எடுத்துக் கொள்கிறது. இது நியாயமானது என காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவரான சாம் பித்ரோடா கூறி உள்ளார்.இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி கேள்வி எழுப்பிய போது, மக்களின் சொத்துகளை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என சோனியா, ராகுல் உட்பட ஒட்டு மொத்த காங்கிரஸ் கட்சியும் கூறியது. ஆனால் சாம் பித்ரோடாவின் கருத்து காங்கிரஸ் கட்சியின் நோக்கத்தை தெளிவுபடுத்திவிட்டது. நாட்டு மக்களின் தனிச் சொத்தை கணக்கெடுத்து அதை அரசு சொத்தாக மாற்றி, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அதாவது நாட்டின் வளத்தில் சிறுபான்மையினருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பகிர்ந்து அளிக்க விரும்புகிறார்கள்.ஒன்று தனியார் சொத்துகளை பகிர்ந்தளிக்கும் திட்டம் தங்களுக்கு இருப்பதாக காங்கிரஸ் ஒத்துக் கொள்ள வேண்டும். அல்லது காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் உள்ள அந்தக் கருத்தை திரும்பப் பெற வேண்டும். சாம் பித்ரோடாவின் கருத்தை மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் நோக்கம் தற்போது வெளிப்பட்டு விட்டது. மக்கள் இதனை அறிவுப்பூர்வமாக அணுக வேண்டும் என்றார்.பா.ஜ.,வைச் சேர்ந்த அமித் மாளவியா வெளியிட்ட அறிக்கையில், ‛‛ காங்கிரஸ் இந்த தேசத்தை அழிக்க முடிவு செய்துவிட்டது. இப்போது சாம் பித்ரோடா 50 சதவீத பரம்பரை வரி பற்றி பேசுகிறார். அப்படி என்றால் நாம் நமது கடின உழைப்பு மூலம் உருவாக்கும் சொத்தில் 50 சதவீதம் எடுத்துக் கொள்ளப்படும். நாம் செலுத்தும் வரிகளுக்கு அப்பால் இதுவும் எடுத்துக் கொள்ளப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இது நடக்கும் எனக்கூறியுள்ளார்

விவாதம்

சாம் பித்ரோடாவின் இந்த கருத்துக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இது விவாதப் பொருளானது. இதனையடுத்து அவரது கருத்துக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

தனிப்பட்ட கருத்து

இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சாம் பித்ரோடா சிறந்த ஆலோசகர், நண்பர். உலகம் முழுவதும் என்னை உட்பட பலரை வழிநடத்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்கு பல பங்களிப்பை அளித்து உள்ளார். அவர், காங்கிரஸ் அயலக அணியின் தலைவர். அவரது கருத்துகளை வலிமையாகவும், வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில், தனி நபர் ஒருவர் தனது தனிப்பட்ட கருத்து குறித்து விவாதிக்கவும், வெளியில் கூறவும், ஆலோசிக்கவும் சுதந்திரம் உள்ளது. பித்ரோடாவின் கருத்துகள் காங்கிரசின் நிலைப்பாட்டை எப்போதும் பிரதிபலிக்கின்றன என்று அர்த்தம் இல்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பரம்பரை வரி கொண்டு வரும் என சாம் பித்ரோடா கூறவில்லை. அவ்வாறு காங்கிரசின் தேர்தல் அறிக்கையிலும் இல்லை. என்றார்.

நம்பிக்கை இல்லை

காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே கூறுகையில், பரம்பரை வரி என்பதில் காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. அது பற்றி விவாதிக்கவும் இல்லை. பா.ஜ., இது பற்றி பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. உண்மையில், பிரதமர் மோடி, அருண் ஜெட்லி ஆகியோர் தான் இது பற்றி சிந்தித்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

K.n. Dhasarathan
ஏப் 25, 2024 21:34

பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் திரித்து கூறுவது தனி கலை, பொய்கள் கூறுவது தினசரி வேலை, வரலாறு தெரியாமல் பேசுகிறார், ஜவாஹர்லால் நேரு, மோதிலால் நேரு பற்றி பேசுவதற்கே இவர்களுக்கு தகுதி கிடையாது மோதிலால் அவர்கள் தன் சொந்த பணத்தில் அரசுக்கு கட்டி கொடுத்த ஆராய்ச்சி கட்டிடத்தை வேண்டுமென்றே அவர் பெயரை நீக்கினார்கள், ஆனால் மக்கள் பணத்தில் கட்டிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் அவர் பெயரை வைத்தது ஏன் ? ஸ்டிக்கர் ஓட்டும் வேலை தானே ?


Sivak
ஏப் 25, 2024 17:17

மொதல்ல லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்தவன் கிட்ட இருந்து மொத்த சொத்துக்களையும் பறிமுதல் பண்ணுங்க வந்துட்டாங்க.... பெண்களுக்கு ஒரு லட்சம் ஓ சி ல குடுக்கறோம்னு சொன்னானுங்களே அதுக்கு தயார் பன்றானுங்களா ??? சொத்து இருக்கிறவன் பத்திரமா பாத்துக்கங்க


வாய்மையே வெல்லும்
ஏப் 25, 2024 12:34

திருடனுக்கு ஒத்து ஓதும் ஆள் ஒன்னு திருடனாக இருக்கனும் இல்லாங்காட்டி மற்றவர் உழைப்பில் வாழ நினைக்கும் அற்பனாக இருக்க வேண்டும் சரியா ஆபீசர் ?


மாயவரத்தான்
ஏப் 25, 2024 08:42

அதாவது ஒற்றுமையாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் வாக்களிக்கும் மதத்தினருக்கு சரியா ?


பேசும் தமிழன்
ஏப் 25, 2024 08:18

நாட்டு. மக்களின் சொத்துக்களை பிடுங்கி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரித்து கொடுப்போம் என்றால் கூட சரி என்று நினைக்கலாம் .....ஆனால் அதை ஒரு குறிப்பிட்ட மத .... ஆட்களுக்கு கொடுப்போம் என்று கூறுவது ...எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் ???அதனால் தான் கான் கிராஸ் கட்சியை 10 ஆண்டுகள் எதிர்கட்சி அந்தஸ்து கூட கொடுக்காமல் விரட்டி அடித்தனர்....இந்த முறை அதை விட கடுமையாக விரட்டுவார்கள்.


Perumal
ஏப் 25, 2024 00:37

yes i agree, But please do not compare UK with India, I also living in UK, In India people not depend on Government, They saving money for food health and house , But here people with out Government help they can not live for one day, And also compare the population just one state population compare with India, UK customs entirely different from India customs, For everything if you follow western Countries, India is no more, One Example, Anti animals Law, in this you can not kill or torture the animals, Okay But in UK dogs and cats breeders are large, The same Law imposed in India, In Hyderabad only Lakhs street dogs are there every week one Human dying because of Dog bites,


theruvasagan
ஏப் 24, 2024 22:23

செல்வம் சிலரிடத்தில் மட்டும் குவிந்திருப்பது நல்லதல்ல. அது சமூகத்தி்ல் மோசமான பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும். அந்த ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்ய அமெரிக்க அரசாங்கம் செய்யும் செயல் ஏற்கக் கூடியதே. குவிந்து கிடக்கும் செல்வத்தில் ஒரு பகுதி வாரிசுகளுக்கு போகாமல் பொது நலனுக்கு பயன்படுத்துவது ஒட்டு மொத்த சமுதாயத்தையும் உயர்த்தும்.


Sivasankaran Kannan
ஏப் 25, 2024 12:29

லஞ்சம், contract கொள்ளை, கஞ்சா , போதை கடத்தல், டாஸ்மாக் கொள்ளை, மணல் கொள்ளை போன்ற கொடுமைகளை அரசு செய்யாமல் இருந்தால், நீங்கள் சொல்வதை ஏற்கலாம்


ஆரூர் ரங்
ஏப் 24, 2024 22:21

லாட்டரியில் பெரிய பம்பர் பரிசு வாங்கிய பலர் சில ஆண்டுகளில் பழையபடி கூலி வேலைக்கு செல்வதைப் பார்க்கிறேன். பணக்காரர்களின் சொத்துகளைப் பிரித்துக் கொடுத்தால் அதுதான் நட‌க்கு‌ம். நூற்றில் ஒருவருக்கே செல்வத்தைப் பாதுகாத்து முதலீடு செய்யும் திறமை இருக்கும்.


A1Suresh
ஏப் 24, 2024 22:08

பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மக்களின் வரிப்பணத்தில் ஊழல் செய்யும் பெருச்சாளிகள் உலக உத்தமர்கள் போல பேசுகின்றனர்


ஆரூர் ரங்
ஏப் 24, 2024 22:08

காந்தி காலத்திலேயே காங்கிரஸ் பஜாஜ் , பிர்லா ஆதரவில் நடந்தது. காமராஜருக்கு மளிகை சாமான்களை TVS ம் உடைகளை இந்தியன் எக்ஸ்ப்ரஸ் கோயங்கா அவர்களும் கொடுத்து உதவிக் கொண்டிருந்தனர் . சத்தியமூர்த்திபவன் இருக்கும் இடத்தை லாடு தாஸ் எனும் குஜராத்தி செல்வந்தர் அளித்தார். எனவே சோசலிஸம் கார்பரேட் ஒழிப்பு எல்லாம் நாடகமே .


மேலும் செய்திகள்













புதிய வீடியோ