மேலும் செய்திகள்
வாகனம் மோதியதில் பைக்கில் சென்றவர் பலி
21-Sep-2024
பாலக்காடு : பாலக்காடு அருகே, காட்டுபன்றி பைக்கில் மோதியதில், தடுமாறி விழுந்து படுகாயமடைந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு கிளிரானி பகுதி சேர்ந்தவர் ஆஷிக், 32. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், கடந்த, 12ம் தேதி இரவு, 9:00 மணிக்கு மண்ணார்க்காடு - -கோங்காடு ரோட்டில் பைக்கில் சென்ற போது, முக்கண்ணம் பகுதியில் திடீரென குறுக்கிட்ட காட்டுப்பன்றி பைக்கில் மோதியது.இதில், கட்டுப்பாட்டை இழந்து பைக் கீழே சரிந்ததில், ஆஷிக் படுகாயமடைந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மண்ணார்க்காடு தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
21-Sep-2024