உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கண்களில் மிளகாய்பொடி துாவி கைதி சித்ரவதை போலீசாக நடித்தவரை அடித்து கொன்றதாக புகார்

கண்களில் மிளகாய்பொடி துாவி கைதி சித்ரவதை போலீசாக நடித்தவரை அடித்து கொன்றதாக புகார்

ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்: போலீஸ் என கூறி, தம்பதியை மிரட்டி பணம் பறித்த வழக்கில், கைதான வாலிபர் உடல்நலக்குறைவால் இறந்தார். விசாரணையின் போது வாலிபரின் கண்களில் மிளகாய்பொடி துாவியும், அரைத்த பச்சை மிளகாயை ஆசன வாயிலில் தேய்த்தும் சித்ரவதை செய்ததாக அவரது நண்பர் குற்றம் சாட்டினார். பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் வசிப்பவர் சஞ்சீவ்குமார். கடந்த மாதம் 12 ம் தேதி இரவு 9:30 மணிக்கு, இவரது வீட்டிற்கு தாவரகெரேயை சேர்ந்த கணேஷ், 27 என்பவர், போலீஸ் சீருடையில் சென்றார்.தன்னை போலீஸ் என்று கூறி, உங்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், நீங்கள் பிரச்னை செய்கிறீர்கள் என்று, புகார் செய்து உள்ளனர். உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் கஞ்சா விற்பதாக கூறி, கைது செய்வோம் என்று மிரட்டி, சஞ்சீவ்குமார், அவரது மனைவி ஜெனிபரிடம் 2.50 லட்சம் ரூபாய் பறித்தார்.* உடல்நலக்குறைவுஇது பற்றி விசாரித்த போது, கணேஷ், போலி போலீஸ்காரர் என்பது தெரிந்தது. அவர் மீது ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் போலீசில், சஞ்சீவ்குமார் புகார் செய்தார். அதன் பேரில், கடந்த 22 ம் தேதி கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.நேற்று முன்தினம் கணேஷுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவரது உடல்நிலை மோசமானது. சிறையில் இருந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார்.* சித்ரவதைஇந்நிலையில் கணேஷை சித்ரவதை செய்து கொன்றதாக, ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் போலீசார் மீது, கணேஷின் நண்பர் குற்றம் சாட்டியுள்ளார்.அவர் கூறுகையில், ''சஞ்சீவ்குமாரை மிரட்டி பறித்த பணத்தை, என்னிடம் கணேஷ் கொடுத்தார். கணேஷை கைது செய்ததும், என்னையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். பணத்தை, அவர்களிடம் கொடுத்த பின்னரும் என்னை துன்புறுத்தினர். என்னிடமிருந்து ஆறரை லட்சம் ரூபாயை வாங்கி கொண்டு, என்னை விடுவித்தனர்.விசாரணையின் போது கணேஷின் கண்களில் மிளகாய்பொடி துாவியும், அரைத்த பச்சை மிளகாயை ஆசன வாயிலில் தேய்த்தும், அடித்தும் சித்ரவதை செய்தனர். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. போலீஸ் காவலில் இறந்தால் பிரச்னை வரும் என்று, சிறைக்கு அனுப்பி வைத்தனர். கணேஷை கொன்ற போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை