பிரதமரால் ஈர்க்கப்பட்டேன்: பத்ம விருது பெற்ற பழங்குடி கலைஞர் புகழாரம்
போபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த துர்கா பாய் வியாம், பழங்குடியின பெண் கலைஞர் ஆவார். வியாம், கலைச்சேவையை பாராட்டி, மத்திய அரசு அவருக்கு,2022ல் பத்ம விருது கொடுத்தது. இந்நிலையில், அவர் இன்று மாநில பா.ஜ.க.,வில் இணைந்தார்.முதல்வர் மோகன் யாதவ் கூறியதாவது:பத்ம ஸ்ரீ விருது பெற்ற பழங்குடியின கலைஞர் துர்கா பாய் வியாம், பிரதமர் நரேந்திர மோடி, அவரது சமூகத்தை ஆதரிக்கும் விதத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டார். இதனையடுத்து வியாம், இன்று பா.ஜ.க.,வில் இணைந்தார்.வியாம், என்னை சந்திக்க விரும்புவதாக அறிந்து, அவருடைய வீட்டிற்கு சென்றேன். அங்கு அவர், ராணி துர்காவதியின் மகிமையையும், நல்லாட்சியையும் மேம்படுத்த, அரசு செய்து வரும் பணிகள் மற்றும் அவருடைய சமூகத்தில் பிரதமர் நடந்து கொண்ட விதம், தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு, பா.ஜ.க.,வில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தார். ராணி துர்காவதி பதினாறாம் நூற்றாண்டில் முகலாயப் படைகளுக்கு எதிராக வீரத்துடன் போரிட்ட கோண்ட் வம்சத்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ராணி ஆவார்.அது போல், மாநில அரசு ஆட்சி செய்கிறது.மாநில பாஜக தலைவர் சர்மா, போபாலின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை கட்சியில் இணைத்து வருகிறார். அவரது பணிகளில் ஒரு பகுதியாக வியாம் பா.ஜ.க.,வில் இணைந்துள்ளார்.இவ்வாறு முதல்வர் மோகன் யாதவ் கூறினார்.