அம்பேத்கருக்கு அவமதிப்பு!
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி மோசமான போஸ்டர் அரசியலில் ஈடுபட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அவரின் படத்தை திருத்தி, அதில் ஒரு பாதியாக அகிலேஷ் படத்தை வைத்துள்ளனர். இதை நிறுத்திக்கொள்ளாவிட்டால், வீதிக்கு வந்து போராடுவோம்.- மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ் பிரதமருக்கு ஆதரவு!
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம். காங்கிரஸ் சார்பில் பார்லிமென்ட் சிறப்பு அமர்வை கூட்ட கோரிக்கை வைத்துள்ளனர். இது, பஹல்காம் தாக்குதல் குறித்த செய்தியை உலகுக்கு தெரிவிக்க பயனுள்ளதாக இருக்கும்.- சரத் பவார்தலைவர், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணிவிரைந்து நடவடிக்கை!
மக்களின் கருத்தையும், நாட்டில் நிலவும் உணர்வையும் பிரதமர் மோடி புரிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தர, எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் மேற்கொள்ள அனைத்து கட்சிகளும் அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளன. நாட்டைப் பாதுகாக்க, அவர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மல்லிகார்ஜுன கார்கேதலைவர், காங்கிரஸ்