உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உளவுத்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு; டிரைவர் கைது

உளவுத்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு; டிரைவர் கைது

ஹரித்வார்: உத்தரகண்டின் ஹரித்வாரில் கங்கால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. உளவுத்துறை எஸ்பி நவுடியால் மீது அவரது கார் டிரைவர் வினோத் நேகி நடத்திய இந்தத் தாக்குதலில், அவருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய டிரைவரை வினோத் நேகியை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. பணிச்சுமையால் ஏற்பட்ட விரக்தியில், சட்டவிரோத துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை