உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கலிபோர்னியாவில் குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலா என விசாரணை

கலிபோர்னியாவில் குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலா என விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாம் ஸ்பிரிங்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பாம் ஸ்பிரிங்ஸ் பகுதியில் மகப்பேறு மருத்துவ மையம் உள்ளது. இதன் அருகிலேயே கருத்தரித்தல் மையம் அமைந்துள்ளது. இதன் உரிமையாளராக டாக்டர் மஹத் அப்துல்லா உள்ளார். இந்த கருத்தரித்தல் மையத்தின் 'கார் பார்க்கிங்' பகுதியில் நேற்று காலை 11:00 மணிக்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், அங்கிருந்த நபர் ஒருவர் பலியானார்; ஐந்து பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் கருத்தரித்தல் மைய அலுவலக கட்டடம் சேதமடைந்தது. அருகில் உள்ள மருந்தகம் உள்ளிட்ட கட்டடங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டன. அதிர்ஷ்டவசமாக கருத்தரித்தல் மையத்தில் குறைந்த அளவே மக்கள் இருந்ததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. குண்டுவெடிப்பு தொடர்பாக மஹத் அப்துல்லா அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., குற்றஞ்சாட்டிஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 19, 2025 07:20

லஷ்கர் ஆளை அரசாங்கத்தில் சேர்த்து அவர் மூலமாக பாகிஸ்தான் பிரதமர் இராணுவ தளபதி மூலம் பேசி ஜ எம் எப் நிதி உதவி ஒரு பில்லியன் டாலர் டிரம்ப் மகன்கள் கம்பெனிக்கு செல்ல வலை விரித்தால் என்ன நடக்கும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறு வேண்டியது இல்லை


மீனவ நண்பன்
மே 19, 2025 04:09

அமைதிக்கு பங்கம்


Kasimani Baskaran
மே 19, 2025 04:02

தீமக்க்கா ஸ்டைலில் சொன்னால் வெள்ளைக்கார தீவிரவாதம் என்றுதான் வகைப்படுத்த வாய்ப்பு உள்ளது. கிழித்தது...


D.Ambujavalli
மே 19, 2025 03:10

நோயாளிகளும், குழந்தைகளும் உள்ள மருத்துவமனைக்கே பாதுகாப்பில்லை என்றால், ‘மருத்துவமனை சென்று உயிரிழப்பதைவிட வீட்டிலேயே சாகலாம் ‘ என்றுகூட மக்கள் எண்ணும் நாள் வந்துவிட்டதே


புதிய வீடியோ