உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காப்பீட்டு ஆணையத்தில் காலிப்பணியிடங்கள்: 49 பேருக்கு அதிகாரியாகும் நல்வாய்ப்பு!

காப்பீட்டு ஆணையத்தில் காலிப்பணியிடங்கள்: 49 பேருக்கு அதிகாரியாகும் நல்வாய்ப்பு!

புதுடில்லி: இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) 49 அசிஸ்டண்ட் மேனஜர் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 20.இன்சூரன்ஸ் நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும்,இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் (IRDAI) 49 அசிஸ்டண்ட் மேனஜர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பொதுப் பிரிவினருக்கு 21 இடங்களும், ஒ.பி.சி., பிரிவினருக்கு 12 இடங்களும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 4 இடங்களும், எஸ்.சி., பிரிவினருக்கு 8 இடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி என்ன?

இளங்கலை பொறியியல் பட்டம் (எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் / இன்பர்மேஷன் டெக்னாலஜி / கம்ப்யூட்டர் சயின்ஸ் / சாப்ட்வேர் இன்ஜினியரிங்) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பெற்று இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://irdai.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 20.

தேர்வு செய்வது எப்படி?

விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்

* பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.750. எஸ். சி, எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை