வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சென்னை என்றாலே திருட்டு தானா? இங்கேயும் சென்னையைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் தான் குற்றம் சாற்றப்பட்டு இருக்கிறார். இவர் திமுகவோ?
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள துவாரபாலகர் சிலையில் பதிக்கப்பட்டு இருந்த தங் க தகடின் ஒரு பகுதியை, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் விற்பனை செய்ததாக உன்னிகிருஷ்ணன் போத்தி வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் பெல்லாரி விரைந்துள்ளனர். விசாரணை சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறை வாயிலின் இருபுறமும் இரண்டு துவாரபாலகர்கள் சிலை உள்ளன. இதில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகள் மறுசீரமைப்பு பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த பணியை, சென்னையைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் பொறுப்பேற்று செய்தார். கோவிலி ல் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தங்கத் தகடுகள் எடை குறைந்தன. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் சபரிமலை கோவிலின் முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உன்னிகிருஷ்ணன் போத்தியை போலீசார் கா வலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். குற்றச்சாட்டு இந்நிலையில், துவாரபாலகர் சிலையில் இருந்து எடுக்கப்பட்ட தங்கம் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கோவர்தன் என்ற வியாபாரியிடம் விற்பனை செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து, கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். உன்னி கிருஷ்ணன் போத்தியுடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் பெல்லாரிக்கு புறப்பட்டுள்ளனர். கொள்ளை போன தங்கம் விரைவில் பறிமுதல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காணாமல் போனதாக தேவசம் விஜிலென்ஸ் அதிகாரிகளால் குறிப் பிடப்பட்ட, 476 கிராம் ஒருவரிடம் விற்கப்பட்டதா அல்லது பல இடங்களில் பிரித்து விற்கப்பட்டதா என்பது பற்றி தகவல் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தேவசம் போர்டின் முக்கிய பிரமுகர்களை, போலீஸ் பாதுகாப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை என்றாலே திருட்டு தானா? இங்கேயும் சென்னையைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் தான் குற்றம் சாற்றப்பட்டு இருக்கிறார். இவர் திமுகவோ?