உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவிக்கு வீட்டு மனை ஒதுக்கியதில் முறைகேடா?: விளக்கம் கேட்டு சித்தராமையாவுக்கு கவர்னர் நோட்டீஸ்

மனைவிக்கு வீட்டு மனை ஒதுக்கியதில் முறைகேடா?: விளக்கம் கேட்டு சித்தராமையாவுக்கு கவர்னர் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு, மைசூருவில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, சித்தராமையாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரில் உள்ள ‛மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் 4,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வர் மனைவி பார்வதிக்கு மைசூரு விஜயநகர் பகுதியில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில், முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை சித்தராமையா மறுத்து வருகிறார். இந்த புகார் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது குறித்து கவர்னர் தாவர்சந்த் கெலாட் சட்ட நிபுணர்களின் ஆலோசனை கேட்டு உள்ளார்.இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு சித்தராமையாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதற்கு, சித்தராமையா இல்லாமல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பிறகு, அமைச்சர்களுக்கு சித்தராமையா விருந்து அளித்தார். இந்த நோட்டீஸ் குறித்து சித்தராமையா சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கவர்னரும், டில்லியில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankaranarayanan
ஆக 01, 2024 20:34

முதல்வர் மனைவி பார்வதிக்கு மைசூரு விஜயநகர் பகுதியில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. முதல்வரின் ஒரு மனைவிக்கே இதுபோன்று 14 விட்டு மனைகள் ஒதுக்கப்பட்டால் என்னய்யா அர்த்தம்


வாய்மையே வெல்லும்
ஆக 01, 2024 17:28

செத்த கொண்டெய்யா வ புடிச்சு உள்ள போட்டு லாடம் அடிங்க. ஊருக்கு இளிச்சயாயன் பொண்டாட்டி பேருல நூறு வீடு. என்னய்யா இவரின் அரசியல் குருஜி கொள்ளையன் கடாக்கட்டு செய்யுறதை விட அநியாயமா இருக்கே ..


RAMASAMY
ஆக 01, 2024 17:11

காங்கிரஸ் எப்பொழுதோ ஊழல் கட்சி நிரூபிக்கப் பட்டது கார்கே கொள்ளையர்கள் தலைவர் சித்தராமையா டிகே எஸ் உபதலைவர்களே


மேலும் செய்திகள்









புதிய வீடியோ