உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய அணை கட்டுவது சாத்தியமா? மத்திய, மாநில அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதிய அணை கட்டுவது சாத்தியமா? மத்திய, மாநில அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி

டில்லி சிறப்பு நிருபர்

முல்லை பெரியாறு அணையின் பயன்பாட்டை நிறுத்தி, புதிய அணை கட்டக்கோரிய மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.உச்ச நீதிமன்றத்தில் கேரளாவைச் சேர்ந்த, 'சேவ் கேரளா பிரிகேட்' என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில், 'கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையின் பயன்பாட்டை நிறுத்தி, புதிய அணை கட்ட உத்தரவிட வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.வி.கிரி, “முல்லை பெரியாறு அணை, 130 ஆண்டுகள் பழமையானது. ''இந்த அணைக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவர். எனவே, முல்லை பெரியாறு அணையின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்றார். உடன் தலைமை நீதிபதி, “அணை வலுவாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்கலாம்,” என யோசனை தெரிவித்தார்.அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதியான சந்திரன், “பழமைவாய்ந்த அணை எந்த வகையில் பாதுகாப்பு குறைபாடுடன் இருக்கிறது என்பதை மனுதாரரான நீங்கள் விளக்க வேண்டும். புதிய அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் பிரச்னை ஏற்படலாம்,” என்றார். இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிரி, “உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை பின்பற்றியே புதிய அணை கட்டப்படும்,” என்றார்.இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக, மத்திய அரசு மற்றும் தமிழக அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

duruvasar
அக் 14, 2025 09:14

கர்நாடகா ஹேமாவதி அணை கட்டுவதற்கு மனமுவந்து அனுமதி கொடுத்து அகமகிழிந்தவர் எங்கள் தமிழின தலைவர் .


Rajan A
அக் 14, 2025 09:09

130 வருடங்கள் அணை தாங்கி கொண்டு இருக்கிறது. சேட்டன் சும்மா புருடா விட்டு பணம் பார்க்க வேண்டும் என முடிவு செய்து விட்டார். இதுல தொப்புள் கொடி உறவு வேறு. ஐ டோண்ட் கேர்னு சொல்லுவாரா இப்போது?


GMM
அக் 14, 2025 08:36

முல்லை பெரியாறு அணை பயன்பாட்டை நிறுத்த முடியாது. மனிதன் சுவாசிப்பதை நிறுத்த முடியாது. ஓட்டு வாங்க குடியிருப்பு. அணை உடைந்தால் மக்கள் பாதிப்பு இருக்கும். மன்னர் காலம் போல் மேடான பகுதியில் குடியிருப்பு பகுதி இல்லை. தடுப்பணை, நீர் வழி தடம் மாற்றம், மக்கள் இட பெயர்வு. மாற்று வழி ஏராளம் உள்ளன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை