UPDATED : ஜூலை 28, 2025 01:31 PM | ADDED : ஜூலை 28, 2025 01:29 PM
பாலிவுட்டின் பிரபல நடிகை கரிஷ்மா கபூர். 90களில் டாப் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர். 2003ம் ஆண்டு சஞ்சய் கபூர் என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். 13 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவர்கள் இருவரும் பிரிந்தனர். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.கடந்த மாதம் சஞ்சய் கபூர், இங்கிலாந்தில் போலோ விளையாடிய போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் மரணம் அடைந்தார். பின்னர் டில்லிக்குக் கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு தனது மகன், மகள் ஆகியோருடன் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.இதனிடையே கடந்த சில நாட்களாக மறைந்த அவரது முன்னாள் கணவர் சஞ்சய் கபூரின் 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் தனக்கும் கரிஷ்மா உரிமை கோரி வருவதாக ஒரு தகவல் வெளியாக உள்ளது. அதோடு மறைந்த சஞ்சய் கபூரின் மனைவி பிரியா சச்தேவ் கபூர், அம்மா ராணி கபூர் ஆகியோரும் அந்த சொத்து குறித்தும், அவர்களது கம்பெனியின் நிர்வாகம் குறித்தும் சண்டை போட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளது.இது குறித்து அதிகாரப்பூர்வ செய்தி இல்லை என்றாலும் பாலிவுட் மீடியாக்கள், வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.இதனிடையே சஞ்சய் கபூரின் தாயார் ராணி கபூர் கூறுகையில், ‛‛மகன் இறந்ததால் நான் மன உளைச்சலில் இருக்கிறேன். இந்தச் சூழலில் என்னை தனி அறையில் வைத்து சில ஆவணங்களை காட்டி அதில் கையெழுத்து போடும்படி கட்டாயப்படுத்தினர். மேலும் சோனா கம்பெனி போர்டுக்கு என் சார்பில் (பிரியா சச்தேவ்) யாரையும் நியமிக்கவில்லை. அவர்களுக்கு எந்த அனுமதியும் கொடுக்கவில்லை'' என குற்றம்சாட்டி உள்ளார்.