உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சசி தரூரால் பா.ஜ.,வில் புகைச்சல்?

சசி தரூரால் பா.ஜ.,வில் புகைச்சல்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரசிலும், பா.ஜ.,விலும் ஒருவரை பற்றித்தான் இப்போது அதிக பேச்சாக இருக்கிறது. அவர், முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், திருவனந்தபுரத்திலிருந்து நான்காவது முறையாக, காங்., - எம்.பி.,யான சசி தரூர்.ஐக்கிய நாடுகள் சபையில், பல்வேறு பதவிகளில் பணியாற்றிய தரூர், தற்போது, பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார்; மேலும், வெளியுறவுத் துறையின் பார்லிமென்ட் குழுவின் தலைவராகவும் உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7om37p0o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காங்கிரசின் எதிர்ப்பை மீறி, 'ஆப்பரேஷன் சிந்துார்' பற்றியும் பாகிஸ்தான் பயங்கரவாதம் பற்றியும் வெளிநாடுகளுக்கு விளக்க, பார்லிமென்ட் குழுவின் தலைவராக அமெரிக்கா சென்றவர் தரூர். அங்கிருந்து திரும்பிய பின், மோடியால் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டார்; வெளிநாட்டு மொழிகளை அறிந்த தரூர், ரஷ்யாவில் பிரெஞ்ச் மொழியில் பேசி, அனைவரையும் அசத்தினார்.சுருக்கமாக சொன்னால், ஒரு வெளியுறவுத் துறை அமைச்சர் செய்ய வேண்டிய விஷயங்களை செய்து வருகிறார் தரூர். இந்த விவகாரங்கள் ராகுலுக்கும், மல்லிகார்ஜுன கார்கேவிற்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. தரூரை, காங்., மறைமுகமாக விமர்சித்து வருகிறது. 'கட்சியிலிருந்து இவர் விரைவில் நீக்கப்படலாம்; இதையடுத்து, இவர் பா.ஜ.,வில் இணையலாம்' எனவும் காங்கிரசுக்குள் பேசப்படுகிறது.இன்னொரு பக்கம், பா.ஜ.,விற்குள்ளும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 'வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, காங்கிரசின் தரூருக்கு இந்த அளவிற்கு எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்?' என, புகைச்சல் நிலவுகிறதாம்.'யாரிடம் திறமை உள்ளது என்பதை உன்னிப்பாக கவனிப்பது மோடியின் வழக்கம்; அதனால்தான், தரூருக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறார்' என, பா.ஜ.,வில் ஒருசாரார் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஜூன் 29, 2025 11:27

காங்கிரஸுக்கு ஆப்பு வைப்பதாக நினைத்து பாஜக தமக்குத் தாமே ஆப்பு வைத்துக் கொண்டு விட்டனரோ!


Kasimani Baskaran
ஜூன் 29, 2025 10:46

நாட்டு நலனில் அக்கறையுடன் ஒருவரை தேர்வு செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியதில் கட்சி, தனிப்பட்ட விருப்பு வெறுப்பு போன்றவற்றை புகுத்தினால் சிக்கல்தான் பெரிதாகுமே தவிர பிரச்சினையை தீர்க்க முடியாது. ஜெய் ஷங்கரை ஒப்பிட்டால் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உண்டு. காங்கிரசின் கொள்கை இரண்டாம் கெட்டான். பாஜகவின் கொள்கை இந்தியாவையும் அதன் முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டது. பாஜகவினர் நாட்டு நலனில் அக்கறையுள்ளவர்கள். காட்சியையோ அல்லது தனிமனிதர்களையோ பொறுத்து அவர்களின் கொள்கை அமையாது.


subramanian
ஜூன் 29, 2025 10:38

சசிதரூர், ஜெய்ஷ்ங்கர் இரண்டு பேரும் பாரதத்தின் மாணிக்கங்கள் . மோடிஜி நாட்டிற்கு இவர்களின் சேவையை கொடுத்து இருக்கிறார். அரசன் செய்வதை கேள்வி கேட்கும் உரிமை எவனுக்கும் இல்லை. நாட்டிற்கு நல்லது செய்யும் போது ஆதரவு தாருங்கள்.


Yes your honor
ஜூன் 29, 2025 12:08

ஆம். உண்மை. உங்களின் இந்த கருத்தை நான் மனதார வரவேற்கிறேன்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 29, 2025 09:17

ஜெய்சங்கர் ஒருவேளை தனது பதவியில் நெடுநாட்கள் இருந்து விட்டதால் விலகும் மனநிலையில் இருக்கலாம், மோடியிடம் தனிப்பட்ட முறையில் தனது விருப்பத்தை சொல்லியிருக்கலாம். அடுத்த சரியான நபரை தேர்ந்தெடுக்க இந்த நாடகம் என்று தோன்றுகிறது.


Iyer
ஜூன் 29, 2025 06:36

மோதி தனது கட்சிக்குள்ளேயே DIRTY POLITICS விளையாட மாட்டார். ஜெய் ஷங்கர், சஷி தரூர் இருவருமே நல்ல திறமை படைத்தவர்கள் என்பதில் ஐயமில்லை இருவருக்குமே நல்ல வாய்ப்புகள் கொடுப்பர் மோதி


Subramanian
ஜூன் 29, 2025 06:10

Without talking to EAM Jaishankar, PM would not have engaged Shashi Tharoor


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை