உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்டாலின் அய்யப்ப பக்தரா?

ஸ்டாலின் அய்யப்ப பக்தரா?

உலகளாவிய அய்யப்ப சங்கமம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் அரசியல் இல்லை என்கிறார் கேரள முதல்வர் பினராயி. அப்படி என்றால், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தது ஏன்? அவர் என்ன அய்யப்ப பக்தரா? தேர்தலை மனதில் வைத்து, மார்க்சிஸ்ட் அரசு போடும் அரசியல் நாடகம் இது. ராஜீவ் சந்திரசேகர் கேரள பா.ஜ., தலைவர்

ஒருபோதும் பலிக்காது!

மேற்கு வங்க மாநில மக்களின் ஓட்டுரிமையை பறிக்க பா.ஜ., சதி செய்கிறது. தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால், குறுக்கு வழியை நாடுகின்றனர். நான் இருக்கும் வரை பா.ஜ.,வின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது. வரும் சட்டசபை தேர்தலில், அக்கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர். மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

100 சதவீத வரி விதிப்போம்!

அமெரிக்கா இறக்குமதி பொருட் களுக்கு மத்திய அரசு அதிக வரிகளை விதிக்க வேண்டும். அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தால், நாம் 100 சதவீத வரிகளை விதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு அளிப்போம். அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி