உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய மாநாட்டு கட்சி முஸ்லிம் கட்சியா? என்ன சொல்கிறார் உமர் அப்துல்லா

தேசிய மாநாட்டு கட்சி முஸ்லிம் கட்சியா? என்ன சொல்கிறார் உமர் அப்துல்லா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு: ''தேசிய மாநாட்டு கட்சியை முஸ்லிம் கட்சி என சொல்கின்றனர். ஆனால், ஹிந்து மதத்தை சேர்ந்தவரை நாங்கள் துணை முதல்வர் ஆக்கி உள்ளோம்,'' என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக ஜம்முவில் நடந்த நிகழ்ச்சியில் உமர் அப்துல்லா பேசியதாவது: தேர்தல் முடிவு வந்த போது, எங்களின் நலன் விரும்பிகள் சிலர், ஜம்முவில் இருந்து தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவர் யாரும் வெற்றி பெறாததால், அந்த பகுதி புறக்கணிக்கப்படும் என வதந்தி பரப்பினர். ஆனால், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அனைவருக்காகவும் ஆட்சி செய்வோம் என பதவியேற்ற நாள் முதல் நான் கூறி வருகிறேன். எங்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்காகவும் பணியாற்றுவோம். எங்கள் கட்சியை சேர்ந்தவரை துணை முதல்வராக ஆக்கி உள்ளோம். தேர்தலின் போது, தேசிய மாநாட்டு கட்சியை முஸ்லிம் கட்சி. காஷ்மீரிகளுக்காக உருவாக்கப்பட்டது. ஜம்முவை சேர்ந்தவர்களுக்கு இடம் இருக்காது என சிலர் கூறினர். துணை முதல்வர் நியமிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருப்பினும், ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவரை அந்த பதவியில் நியமித்து உள்ளோம். அவர் ஜம்முவை சேர்ந்தவர். அதிலும் ஹிந்து மதத்தை சேர்ந்தவர். அவருக்கும், எனது குடும்பத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேசிய மாநாட்டு கட்சியை முஸ்லிம் கட்சி எனக்கூறியவர்களுக்கு நாங்கள் அளிக்கும் பதில் இதுதான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

கிஜன்
அக் 19, 2024 21:17

நல்ல மாற்றம் தான் ... நீங்கள் நியமிக்கவிட்டாலும் உங்களை யாரும் கேள்வி கேட்டிருக்க இயலாது ... மத்திய அரசின் துணையுடன் ....பல நல்ல திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டுவாருங்கள் ....


Ramesh Sargam
அக் 19, 2024 18:13

அனைவருக்காகவும், இதில் பாகிஸ்தான் நாட்டினருக்கும் என்று உற்கருத்து உள்ளது.


Nandakumar Naidu.
அக் 19, 2024 17:04

காஷ்மீரி பண்டத்துகளின் இனப்படுகொலையை வேடிக்கை பார்த்ததும் நீங்களும் உன் அப்பாவும் தான். இனப்படுகொலை நடக்கப் போகிறது என்று தெரிந்தே உங்கள் அப்பா லண்டனுக்கு ஓடி விட்டார். இப்போது நீலி கண்ணீர் வடிக்க வேண்டாம் ஓமர் அப்துல்லா. காங்கிரஸ் போல தேவையான போது நிறம் மாறும் பச்சோந்திகள் நீங்கள்.


Rajan
அக் 19, 2024 16:54

அனைவருக்காகவும் ஆட்சி செய்வோம் - இந்த டயலாக் எங்கயோ கேட்ட மாதிரி இல்ல?


Sankar Ramu
அக் 19, 2024 17:46

நம்ப முதல்வர்தான். குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரமாட்டாங்கன்னு சொன்னவர் ?


சமீபத்திய செய்தி