உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு இடைத்தேர்தல் ஓட்டு இயந்திரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லையா: பா.ஜ., கேள்வி

வயநாடு இடைத்தேர்தல் ஓட்டு இயந்திரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லையா: பா.ஜ., கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் குறித்து விமர்சித்த சிவசேனா கட்சித் தலைவர் சஞ்சய் ராவத்துக்கு பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், முதலில் இழுபறி நீடித்து வந்தாலும், பிறகு ஆளும் மஹாயுதி கூட்டணி 221 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ., 131 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி 55 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ax3t7990&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல, இண்டியா கூட்டணி வெறும் 51 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 தொகுதிகளிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம், மாபெரும் வெற்றியுடன் மஹாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உள்ளது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், தேர்தலில் அடைந்த தோல்வி குறித்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத், 'மஹாயுதி கூட்டணி தேர்தல் முடிவுகளில் குளறுபடிகளை செய்துள்ளது. எங்கள் தொகுதிகளை அவர்கள் திருடி விட்டனர். இது மக்கள் முடிவு அல்ல. மக்களே இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏக்நாத் ஷிண்டே 50 சீட்டுகளையும், அஜித் பவார் 40 சீட்டுகளையும், பா.ஜ., 130 சீட்டுகளையும் பெற வாய்ப்பு இருக்கிறதா' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது இந்தப் பேச்சுக்கு பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஷெஷாத் பூனவல்லா கூறியதாவது: எப்போது எல்லாம் தேர்தலில் தோல்வியை சந்திக்கிறார்களோ, அப்போது எல்லாம் இது மாதிரியான குற்றச்சாட்டுகளை கூறுவார்கள். சஞ்சய் ராவத் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது பேச்சை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு ஜோக்கரைப் போல பேசி வருகிறார். வயநாட்டிலும், ஜார்க்கண்டிலும், ஜம்மு காஷ்மீரிலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் எந்த கோளாறும் இல்லையா?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

பேசும் தமிழன்
நவ 24, 2024 13:32

நன்றாக இருந்த சிவசேனா கட்சியை.... சரத்பவார் தனது கையாளான... இவனை பயன்படுத்தி உத்தவ் தாக்கரே அவர்களுக்கு பதவி ஆசை காட்டி.... கட்சியை காலி செய்து விட்டார்.....வெற்றி பெற்றால் மக்கள் தீர்ப்பு... தோல்வி அடைந்தால் EVM மெசின் மீது குற்றசாட்டு.... நல்லா வாயில் வந்துரும் ஆமாம்.


Jay
நவ 24, 2024 10:13

இங்கு திமுக எதை சொன்னாலும் நம்புகிற ஊபிஸ் போல அந்த ஊரில் எதை சொன்னாலும் நம்பக்கூடிய மக்களுக்காக இப்படிப்பட்ட அறிக்கைகளை விடுகிறார்கள். இங்கு திமுக அடுத்த முறை தோற்கும் போது இங்கு இருக்கும் ஊபீஸ்கள் களிமண்களாக EVMனால் தோற்றோம் என்று மடத்தனத்தை அனைத்து மீடியாவிலும் தொடர்ந்து போடுவார்கள்.


Venkatesh
நவ 23, 2024 21:21

வந்துட்டாரு திராவிட உபிஸ் என்ன ஒரு கோழைத்தனம்..... தோத்தால் மின்னணு வாக்குப்பதிவு ஏமாற்று என்பது.... ஜெயித்து விட்டால் வாயை மூடிக்கொண்டு போவது... மானங்கெட்ட பொழப்பு...


S S
நவ 23, 2024 19:25

EVM இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மையை விட ஜனநாயகம் மீதான நம்பிக்கை மிகவும் முக்கியமானது. அதனால்தான் அமெரிக்கா இன்னமும் வாக்கு சீட்டு முறையை பின்பற்றுகிறது. நம்மை விட அறிவியலில் பல மடங்கு முன்னேறிய நாடு. வாக்கு எண்ணுவதற்கு அதிக நாளானாலும் பரவாயில்லை. தற்போது கூட வாக்கு பதிவு முடிந்து ஒன்றரை மாதம் கழித்தே முடிவுகள் வெளியிடபடுகின்றன.


SUBBU,MADURAI
நவ 23, 2024 20:08

நம்மை விட அறிவியலில் முன்னேறிய நாட்டில்தான் பலபேர் Voter id என்ற அடையாள அட்டை கூட இல்லாமல் வாக்களித்து இருக்கிறார்கள். போன தேர்தலில் (பிடன் அதிபரானது) அமெரிக்காவில் நடந்த கூத்தை இந்த உலகமே பார்த்து கை கொட்டி சிரித்தது. மேலும் அமெரிக்க நாட்டின் மக்கள் தொகை சுமார் 34.5 கோடி மட்டும்தான் ஆனால் இந்திய நாட்டின் மக்கள் தொகை 140 கோடி அதனால் இந்தியாவில் ஓட்டுச் சீட்டு மூலம் வாக்களிப்பது என்பது நடைமுறைக்கு ஒத்து வராது. EVM பற்றி பலமுறை விரிவாக விளக்கம் கொடுத்தும் உங்களை போன்ற சிலர் வம்புக்காக இப்படி வீண் பிடிவாதம் பிடிப்பதை நிறுத்த முடியாது.


C.SRIRAM
நவ 23, 2024 20:25

வாக்கு சீட்டு உபயோகித்தால் எவ்வாளவு காகிதம் மற்றும் மரங்கள் வீணடிக்கப்படும்?. மீண்டும் கற்காலத்துக்கு போக முடியாது . கூடாது .


PARTHASARATHI J S
நவ 24, 2024 06:58

அமெரிக்காவில் நடக்கும் தேர்தல் ஈவிஎம் கிடையாது. ஆனால் ஈமெயிலில் ஓட்டு போடலாம். தெரிந்து கொண்டு பேசவும். சேகர்பாபு மாதிரி அடிச்சு விடக்கூடாது.


பேசும் தமிழன்
நவ 24, 2024 13:36

EVM மெசின் மூலம் தவறு செய்யலாம் என்று நிரூபித்து காட்டினால் பரிசு என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் போது நீயெல்லாம் எங்கே போய் இருந்தாய்.... தவறு எப்படி செய்யலாம் என்று நிரூபித்து காட்டி அந்த பரிசை நீங்களே வாங்கி கொண்டு இருக்கலாமே ???


SUBBU,MADURAI
நவ 23, 2024 18:55

இந்த சஞ்சய்ராவத்தை ஜாமீனில் எடுக்காமல் தேர்தல் முடியும் வரை சிறையிலேயே வைத்து இருந்திருந்தால் ஒருவேளை உத்தவ் தாக்கரேவின் கட்சி ஜெயிப்பதற்கு ஓரளவு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் இவர் வெளியே வந்து ஓவராக பேசிய பேச்சுக்களால்தான் உத்தவ் கட்சி இப்படி மோசமாக தோல்வியடைய நேரிட்டது. ஏற்கனவே இவர் சிறைக்கு சென்றதற்கு வேறு யாரும் காரணமல்ல இவருடைய வாய் முகூர்த்தம்தான்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
நவ 23, 2024 18:23

தற்காலத்தில் யாரும் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். தேர்வில் தோல்வி, காதலில் தோல்வி, தொழிலில் தோல்வி என்றால் உடனே தற்கொலை அல்லது வன்முறை. யாரும் மீண்டும் முயற்சிப்போம், தாங்கள் செய்த தவறு என்ன என்று யோசிப்பதில்லை. அதுபோலவே அரசியலிலும் தோல்வியை ஏற்க மறுத்து பேசுகிறார்கள். உடனே அமெரிக்காவைப் பார், ஜெர்மனியை பார் அங்கெல்லாம் ஓட்டு மெசின் இல்லை, பேப்பர் ஒட்டுதான் என்பார்கள். நம் மக்கள்தொகைக்கு ஓட்டு மெசின் தான் ஒரே வழி. பேப்பர் ஓட்டு முறையை விட மெசின் முறையில் தவறுகள் குறைவு, முடிவுகள் மாதக்கணக்கில் இழுத்தடிக்காமல் ஓரிரண்டு நாளில் தெரியும்.


Nandakumar Naidu.
நவ 23, 2024 18:20

ஜார்க்கண்ட்டில் EVM மெஷின்களில் எந்த குறைபாடும் இல்லையா? மகாராஷ்டிராவில் மட்டும் குறைபாடு வந்து விட்டதா சஞ்சய் ராவுத்? .


Sundar R
நவ 23, 2024 18:07

சஞ்சய் ரவுட் டக் அவுட் ஆனாலும் தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டார்.


C.SRIRAM
நவ 23, 2024 20:27

கோல்டன் டக் அவுட் . ஊழல் பேர்வழி .


அப்பாவி
நவ 23, 2024 17:58

ஜெயித்தவங்களுக்கு பிரச்சனை கிடையாது. நீங்க எதிர்க்கட்சியானா இதே மாதிரிதான் குதிப்பீங்க கோப்பால்.


ngm
நவ 24, 2024 06:40

அப்பாவி நீ கேப்மாரி. உன் கதறல் ரொம்ப இனிமை


முக்கிய வீடியோ