உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமலுக்கு வந்தது இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்; 3 பிணைக் கைதிகளின் பெயர் வெளியீடு

அமலுக்கு வந்தது இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்; 3 பிணைக் கைதிகளின் பெயர் வெளியீடு

ஜெருசலேம்: இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்று 3 பிணைக் கைதிகளின் பெயர்களை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டதால், 2 மணிநேர தாமதத்திற்குப் பிறகு, காசா போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர், 2023 அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். அப்போது, 200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை அவர்கள் கடத்திச் சென்றனர். போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே, அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்து வந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iw5qiaae&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, 33 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு ஈடாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 770 பாலஸ்தீனியர்கள் விடுதலையாகின்றனர் என தகவல் வெளியாகி இருந்தன.இது தொடர்பாக, இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறியதாவது: போர் நிறுத்தம் அமலுக்கு வராது. காசா மீதான தாக்குதல் தொடரும். ஹமாஸ் அமைப்புடன் போர்நிறுத்தம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை, ஏனெனில் விடுவிக்கப்பட வேண்டிய பிணைக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வழங்கவில்லை. இஸ்ரேல் பிரதமரின் உத்தரவுகளின்படி, ஹமாஸ் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை போர் நிறுத்தம் நடைமுறைக்கு வராது. இவ்வாறு அவர் கூறினார்.

பட்டியல் வெளியீடு

இந்நிலையில், விடுவிக்கப் போகும் 3 பிணைக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டு உள்ளனர். நடைமுறை சிக்கல்கள் காரணமாக இந்த பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.இந்த நிலையில், 3 பெண் பிணைக் கைதிகளின் பெயர் விபரங்களை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. பிணைக் கைதிகளின் முதற்கட்ட பெயர் பட்டியலை 2 மணிநேரம் தாமதமாக ஹமாஸ் வெளியிட்டதால், இந்திய நேரப்படி 2.30 மணியளவில் இந்தப் போர் நடைமுறைக்கு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

naranam
ஜன 20, 2025 03:31

பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டவுடன் எங்ஜியுள்ள தீவிரவாதிகள் அனைவரையும் இஸ்ரேல் கொன்றுவிட வேண்டும்


Laddoo
ஜன 19, 2025 14:56

இஸ்ரல் பிடிவாதம் நல்லதே. தீவிரவாதம் ஒழியும் வரை நாசம் செய்வதே நல்லது. ஹமாஸும் ஹிஸ்பொல்லாஹ்வும் மண்டியிடுவதே நல்லது


SUBBU,MADURAI
ஜன 19, 2025 18:43

The Israeli Air Force has successfully eliminated dozens of Hamas terrorists in Gaza this morning alone, including many who were celebrating on their vehicles.


Sivagiri
ஜன 19, 2025 13:48

நியாயமான கோபம் , , பிடிச்சிட்டு போன அப்பாவிகளை , கொண்டு வந்து ஒப்படைக்காத வரை - கோபம் இருக்கும்ல . . .


Ganapathy
ஜன 19, 2025 12:58

ரொம்பசந்தோசப்பட வேண்டான்னு நினச்சது சரிதான் போல.


Ramesh Sargam
ஜன 19, 2025 12:56

இரண்டு நாட்களுக்கு முன்பு போர் நிறுத்தம் என்று செய்தியை படித்து மகிழ்ச்சி அடைந்தேன். இப்பொழுது போர் தொடரும் என்று செய்தி படித்து துயரம் கொண்டேன். போர்வெறி பிடித்தவர்களை என்ன செய்வது?