உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீன் வளர்ப்பில் இஸ்ரேல் தொழில்நுட்பம் பட்டதாரியின் சுய தொழில் ஆர்வம்

மீன் வளர்ப்பில் இஸ்ரேல் தொழில்நுட்பம் பட்டதாரியின் சுய தொழில் ஆர்வம்

சாம்ராஜ்நகர் மாவட்டம், பன்னிசரிகே கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் கவுடா, 28. பட்டதாரியான இவர், அரசு வேலையை எதிர்பார்க்காமல், சுய தொழில் செய்ய விரும்பினார்.தன் தாய் பெயரில் ஒன்றரை ஏக்கரில் நிலம் வாங்கினார். அதில், நெல், கோழி பண்ணை துவக்கினார்.இதுகுறித்து சஞ்சய் கவுடா கூறியதாவது:எனக்கு அரசு பணியில் விருப்பம் இல்லை. எனவே, நவீன தொழில்நுட்பம் மூலம், மீன்களை வளர்க்க ஆலோசித்தேன்.வழக்கமாக, மீன்களை குளம், அணைகளில் வளர்ப்பர். மீன் வளர்ப்பில் இஸ்ரேலின் தொழில்நுட்பம் குறித்து அறிந்தேன்.இதன்படி, நிலத்தில் இருந்து நான்கு அடி உயரத்தில் 10 மீட்டர் அகலத்திற்கு தொட்டி தயார் செய்ய வேண்டும். 24 மணி நேர தண்ணீர் வினியோகம் இருந்தால், மீன்களுக்கு தேவையான உணவு, பிராணவாயு கிடைக்கும். இதனால் மீன்கள் ஆரோக்கியமாக வளரும்.மத்திய மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கென, 'பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா' திட்டத்தின் கீழ், நிதியுதவி கிடைத்துள்ளது. இதில், பெண்களுக்கு 60 சதவீதமும்; மற்றவர்களுக்கு 40 சதவீதமும் மானியம் கிடைக்கிறது.என் சொந்த பணத்தில் 14 லட்சம் ரூபாயும்; அரசு 4.20 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, 5,000 மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.அரை கிலோ எடை உள்ள மீன்கள், எட்டு மாதங்களில் 400 கிராம் உணவை உட்கொள்கின்றன. மீன்கள் நன்றாக வளர்ந்து விற்பனை செய்யப்பட்டால், மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.

ஏற்றுமதி

என் நிலத்தில் ஏழு தொட்டிகள் அமைத்துள்ளேன். கோதாவரி நதியில் இருந்து நான்கு அங்குல அளவு மீன் குஞ்சுகளை கொண்டு வந்து, வளர்க்கிறோம். வளர்ந்த பின், வெளிநாடுகளுக்கு, 500 கிராம் எடை உள்ள மீன் 250 ரூபாய்க்கும்; 750 கிராம் எடை உள்ள மீன் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறேன்.மதுரை, ஹைதராபாத்தைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்கள், தரத்திற்கு ஏற்ப வாங்கிச் செல்கின்றன. நான் வளர்க்கும் மணல் மீன்கள், சந்தைகளில் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.தனது நிலத்தில் அமைக்கப்பட்ட மீன் தொட்டிகளுடன் சஞ்சய் கவுடா - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி