உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தரபிரதேசத்தில் ராக்கெட் ஏவும் சோதனை வெற்றி; இஸ்ரோ சாதனை

உத்தரபிரதேசத்தில் ராக்கெட் ஏவும் சோதனை வெற்றி; இஸ்ரோ சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில் முதல் முறையாக ராக்கெட் ஏவும் சோதனையை வெற்றிகரமாக இஸ்ரோ நிகழ்த்தி உள்ளது.இந்தியாவில் மொத்தம் 3 இடங்களில் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. திருவனந்தபுரம் (தும்பா), சந்திப்பூர் (ஒடிசா மாநிலம்), ஸ்ரீஹரிகோட்டா ஆகிய 3 இடங்களில் அமைந்துள்ளது. இது மட்டுமின்றி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து ட்ரோன் உதவியுடன் ராக்கெட் ஏவும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தற்போது முதல் முறையாக, உத்தரபிரதேசம் மாநிலம், குஷிநகரில் ராக்கெட் ஏவும் சோதனையை இஸ்ரோ நிகழ்த்தி உள்ளது. இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி அபிஷேக் சிங் கூறியதாவது:ஆமதாபாத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்தி ராக்கெட் ஏவும் சோதனை நடத்தினோம். தற்போது உத்தரபிரதேசத்தில் ஒரு ராக்கெட் மூலம் ஒரு செயற்கைக்கோள் நேரடியாக ஏவப்பட்டது இதுவே முதல் முறை. இந்த சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.த்ரஸ்ட் டெக் இந்தியா லிமிடெட் உடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த சோதனையில், 15 கிலோ எடையுள்ள ராக்கெட் 1.1 கிலோமீட்டர் உயரத்திற்கு பறந்து பாதுகாப்பாக தரையில் இறங்கியது.வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 900 இளைஞர்களால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோளை விண்ணில் ஏவி சோதிக்க உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

A rajamohan
ஜூன் 15, 2025 18:21

Nonsense What is there to claim in this silly rocket launching which was done 50 years back in Thumba?


Ganapathy
ஜூன் 15, 2025 14:32

மேலும் பல வெற்றிகளை சாதிக்க அந்த உலகநாதன் சிவபெருமான் அருள்புரியட்டும்


A1Suresh
ஜூன் 15, 2025 13:52

மகிழ்ச்சியான செய்தி. ராஜீவால் பிமாரு மாநிலங்கள் என கைவிட்பபட்ட உத்தரப்ரதேசம், ஒரிஸ்ஸா ஆகியன முன்னேறிவருகின்றன. இன்னமும் பீஹார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகியன வேகமெடுக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை