உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை

ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை

எர்ணாகுளம் : ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆனால் அவர் விசாரணைக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் முன் ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் லட்சுமி மேனன் மது தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் செப்.,17 வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.கேரளாவில் பிறந்து, மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தமிழில் ‛கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு' உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன். கடைசியாக தமிழில் ‛சப்தம்' படத்தில் நடித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kzsl0w2p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கேரளாவின், எர்ணாகுளத்தில் மதுபானம் பார் ஒன்றில் ஐடி ஊழியர் ஒருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நடந்த பிரச்னையில் அவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஐடி ஊழியர் அளித்த புகாரில் அவரை கடத்திய கும்பலை சேர்ந்த மிதுன், அனீஷ் மற்றும் சோனா ஆகியோர் கைதாகி உள்ளனர். இவர்களுடன் நடிகை லட்சுமி மேனனும் அந்த கும்பலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த தகவலை அறிந்து அவர் தலைமறைவாகிவிட்டாராம். போலீசார் தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனர்.

இடைக்கால தடை

இந்த நிலையில் முன் ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் லட்சுமி மேனன் மது தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் செப்.,17 வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.லட்சுமி மேனன் தற்போது தமிழில் யோகி பாபு உடன் ‛மலை' படத்தில் நடித்துள்ளார். இதுதவிர கவுதம் கார்த்திக் உடன் இவர் நடித்த ‛சிப்பாய்' படம் பாதியில் நின்றுபோனது. பிரபுதேவா உடன் நடித்த ‛யங் மங் சங்' படம் வெளியாகாமல் பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Natchimuthu Chithiraisamy
ஆக 31, 2025 19:37

பண பிரச்னையாக இருக்கலாம்.


Lakshminarayanan
ஆக 30, 2025 06:43

மதுக் கடைகளில் நடந்த தகராருகளை போலீஸ் கண்டுக்காம விட்டாலே போதும்


நந்தகோபால்
ஆக 28, 2025 00:47

மனுவை ஏன் மது என்று அச்சிடபட்டுள்ளது?


Radja
ஆக 27, 2025 19:03

இதுதான் இந்திய அரசியல் மற்றும் நீதித்துறை. இதுவே பக்கத்து நாடான சிங்கப்பூரில் நடந்திருந்தால் இந்த மேனன் இந்நேரம் சிறையில் தான் .ஜெயலலிதா மற்றும் திருட்டு திராவிட ஆட்சியில் எப்படி எல்லோரும் தப்பித்தார்கள் என்று எல்லோரும் அறிவார்கள், மிக்க கேவலமான அரசியல் மற்றும் நீதித்துறை.


M Ramachandran
ஆக 27, 2025 16:00

ஒத்து போக்க வேலாண்டியது தானெ. சகல வசதியுடன் விருப்பப்படி இருந்துட்டுபோக வேலாண்டியது தானெ.என்ன நஷ்டம்? தகராறு எதனால்


M Ramachandran
ஆக 27, 2025 15:57

கேரள காவல்துறைக்கு பசையுள்ள ஜாமாபாந்தி மை கூடு கிடைய்யச்சிடுச்சி.


Venkatesan Ramasamay
ஆக 27, 2025 12:38

எங்காவது ...


Artist
ஆக 27, 2025 11:55

சேட்டன்கள் ராஜ்யத்தில் உய்யலாலா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை