மேலும் செய்திகள்
முதல்வர் அலுவலகம் பெயரில் மிரட்டும் அதிகாரி!
11-Sep-2025
புதுடில்லி:''வட்டார மொழிகளை பாதுகாப்பது அனைவரின் கூட்டுப்பொறுப்பு,'' என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார். டில்லி பல்கலைக்கழகம் சார்பில் நேற்று முன்தினம் நடந்த 'சம்வாதி டில்லி உத்சவ் ஆப் எக்ஸ்பிரஷன்' என்ற தலைப்பிலான கருத்தரங்கில், முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது: ஹிந்தி மற்றும் பாரம்பரிய மொழிகளை பாதுகாக்க வேண்டும். இதற்கான பொறுப்பு, அந்த மொழி வல்லுநர்களை மட்டும் சேராமல், அனைவருக்கும் வர வேண்டும். எதிர்கால தலைமுறையினருக்கு தாய்மொழியை பாதுகாக்க வேண்டும் என்பது அவசியம். வட்டார மொழிகளை பாதுகாப்பது அனைவரின் கூட்டுப் பொறுப்பு. அவரவர் தாய் மொழியில் பேசுவது தான் சிறப்பானது. காலனி ஆதிக்க காலத்தில் உள்ள அடையாள சின்னங்களை பிரதமர் மோடி, அகற்றி வருகிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஹிந்தி மொழியில் பேசினார். எனவே, அவரவர் தாய் மொழிகளை போற்றி பராமரிக்க வேண்டும். உத்தராகண்ட் மாநிலத்தினரை நான் பாராட்டுகிறேன். கார்ஹ்வாலி மற்றும் குமாயோனி மொழிகளை இளம் தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். அந்த மொழிகளை பேசுவதன் வாயிலாக, எழுதுவதன் மூலமாக அந்த மொழிகளின் பாரம்பரிய சிறப்பை மக்கள் உணர வேண்டும். இந்த நிகழ்ச்சியில், டில்லி பல்கலைக்கழக துணை வேந்தர் யோகேஷ் சிங், மிரண்டா கல்லுாரியின் பேராசிரியை பிஜாயலட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.
11-Sep-2025