உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்

பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்

புதுடில்லி:பிதமர் மோடியுடன் பேசியதை கவுரமாக கருதுகிறேன் என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் மற்றும் சி.இ,ஒ., எலான் மஸ்க் கூறினார்.எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ., டெஸ்லா மற்றும் எக்ஸ் வலை தள உரிமையாளர்.மேலும் அமெரிக்க டி.ஓ.ஜி.இ தலைவராகவும் உள்ளார்.இந்நிலையில் எலான் மஸ்க் உடன் இன்று பிரதமர் மோடி பேசினார். அப்போது,தொழில்நுட்பம் மற்றும் புதுமை உருவாக்குதலில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்தத் துறையில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று பிரதமர் மோடி,எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.அதற்கு பதிலளித்து எலான் மஸ்க் பதிவிட்டுள்ளதாவது:இந்திய பிரதமர் மோடியுடன் பேசியதை கவுரவமாக கருதுகிறேன். இந்த ஆண்டு கடைசியில் மேற்கொள்ள இருக்கும் இந்திய பயணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.இவ்வாறு எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sampath Kumar
ஏப் 19, 2025 17:30

என்னங்க இது கடவுள் கிட்ட கூட இப்படி பேச மாடுங்க போல இவருகிட்ட பேசியதை பெருமை என்கிறாரு போக போக புரியும் மக்கு மாஸ்க்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை