உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.டி., பெண்ணுக்கு டிஜிட்டல் கைது மிரட்டல்: ரூ.2 கோடி கொடுத்து ஏமாந்த அவலம்

ஐ.டி., பெண்ணுக்கு டிஜிட்டல் கைது மிரட்டல்: ரூ.2 கோடி கொடுத்து ஏமாந்த அவலம்

பெங்களூரு: 'டிஜிட்டல்' கைது மிரட்டலுக்கு பயந்து தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீடு, நிலத்தை விற்ற ஐ.டி., பெண் ஊழியர், 2 கோடி ரூபாயை மோசடி கும்பலிடம் தந்து ஏமாந்துள்ளார்.பெங்களூரு எச்.ஏ.எல்., விக்ஞான் நகரில் வசிப்பவர் பவிதா தாஸ், 57. ஒயிட்பீல்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை செய்கிறார்.கடந்த ஆகஸ்ட் மாதம், மொபைல் பவிதாவின் போனுக்கு ஒரு அழைப்பு வந் தது. எதிர்முனையில் பேசிய நபர், தன்னை மும்பை சைபர் கிரைம் போலீஸ் என்று அறி முகம் செய்துள்ளார்.'உங்கள் பெயருக்கு, வெளிநாட்டில் இருந்து, 'புளு டார்ட்' நிறுவன கூரியரில் பார்சல் வந்துள்ளது. அந்த பார்சலில் போதைப்பொருள் உள்ளது. உங்களை கைது செய்ய உள்ளோம்' என்று கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், 'அந்த பார்சல் தனக்கு வந்திருக்காது' என, பதிலளித்தார்.எதிர்முனையில் பேசிய நபர், 'உங்களை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற வேண் டும் என்றால், நான் கூறும் வங்கிக்கணக்குகளுக்கு பணம் அனுப்ப வேண்டும்; வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது; வீட்டில் வைத்தே உங்களிடம் விசாரிப்பேன்' என்று மிரட்டியுள்ளார்.இதனால் பயந்து போன பவிதா தாஸ், அவர்கள் கேட்ட பணத்தை ஏற்பாடு செய்வதற்காக, தனக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு மற்றும் இரண்டு நிலங்களை விற்று அந்த மோசடி கும்பல் கேட்கும் போதெல்லாம், பல வங்கி கணக்குகளுக்கு, 2 கோடி ரூபாய் வரை அனுப்பி உள்ளார்.திடீரென அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. டிஜிட்டல் கைது என்று மிரட்டி, தன்னிடம் இருந்து 2 கோடி ரூபாய் பறித்ததை பவிதா உணர்ந்தார். ஒயிட்பீல்டு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அசோகன்
டிச 17, 2025 15:18

எனக்கு என்னமோ இந்த பெண் போதை பொருள் உபயோகிபவராக இருக்கவேண்டும் அதை யெல்லாம் trace செய்துதான் இந்த கும்பல் மிரட்டியுள்ளது. போதை பொருளையே பாக்காத ஒருவரிடம் இப்படி கூறி மிரட்டினால்.... கண்டிப்பாக பயப்படமாட்டார்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 17, 2025 10:27

தாஸ்.. பெங்காலிப் பெண்ணாக இருக்கலாம்.. பெங்காலிகள் துணிவுக்குப் பெயர் பெற்றவர்கள் ..... ஏமாந்தது ஆச்சரியம்.. ஐ டி நிபுணராக இருந்தும் டிஜிட்டல் மோசடி / கைது பற்றி விழிப்புணர்வு இல்லாதது இன்னொரு ஆச்சரியம் ...... வயதாகிவிட்டதுதான் காரணமோ >>>>


Varadarajan Nagarajan
டிச 17, 2025 08:35

செய்தியை படித்தவுடன் சற்று யோசிக்க வேண்டியுள்ளது. பட்டப்படிப்பு படித்து தொழில்நுட்பத்துறையில் இந்த வயதில் கண்டிப்பாக அனுபவங்களுடன் வேலை பார்த்து வரும் ஒருவருக்கு பொது அறிவு என்பது இவ்வளவுதான் இருக்குமா என நினைக்கதோன்றுகின்றது. கல்வியறிவுக்கும் பொது அறிவிற்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. குற்றவாளிகளும் இவைகளைத்தாண்டி மக்களை எப்படி நம்பவைத்து பதட்டத்தை உண்டுபண்ணி நாம் என்ன செய்கின்றோம் அல்லது அடுத்து என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கக்கூட முடியாதளவிற்கு கச்சித்தமாக கொள்ளையை நடத்துகின்றார்கள். கடந்தகாலத்தில் நீதிபதிகள், தொழிலதிபர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றவர்களும் இதுபோன்று ஏமாற்றப்பட்டுளார்கள். தொழில்நுட்ப வல்லுனர்களின் திறமையையும்தாண்டி செயல்படும் குற்றவாளிகளை குற்றம் நடந்தபிறகு காவல்துறைதான் எந்தளவிற்கு கண்டுபிடிக்கமுடியும் என தோன்றுகின்றது.


நிக்கோல்தாம்சன்
டிச 17, 2025 08:10

பத்து லட்சம் ரூபாய்க்கு மேலாக பரிவர்த்தனை செய்யும்போது வங்கி நம்மிடம் மேலும் ஒரு படிவம் பூர்த்தி செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது அப்படியிருந்து இவர் எப்படி பரிவர்த்தனை செய்கிறார் ?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 17, 2025 10:24

ஒருவேளை, ஒரே ரொக்கமாகக் கொடுத்திருக்க மாட்டார் .....


Arul. K
டிச 17, 2025 06:25

உண்மையிலேயே இவர் தகவல் தொழில் நுட்பம் படித்தவரா? கண்டிப்பாக பாம்பின் கால் பாம்பறியும். பேராசைப்பட்டு ஏமாந்த பிறகு டிஜிட்டல் கைது என்று பொய்ச்சொல்கிறாரா?


ThamizhMagan
டிச 17, 2025 05:50

இந்த மாதிரி முட்டாள்கள் மென்பொறியாளராக வேலை செய்கிறார்களா? இந்தியாவுக்கே அவமானம் ஏதோ, இந்திய என்ஜினீயர்கள் அமெரிக்காவில் வானத்தையே வில்லாக வளைப்பது போல் பீற்றிக்கொள்கிறார்கள், இதுதானா அவர்களது பொது அறிவு?


சண்முகம்
டிச 17, 2025 05:34

A fool falls prey to scam. This fool has a college degree, but uneducated.


சிட்டுக்குருவி
டிச 17, 2025 00:37

எனக்கு தினம்தோறும் 10முதல் 15அழைப்புகள் மணியொலிக்கும் .எந்த அழைப்பையும் ஏற்பதில்லை .நிராகரிப்பேன். நான் யாரிடமெல்லாம் பேசுவேனோ ,எங்கிருந்து எல்லாம் அழைப்பை எதிரிபார்க்கிறேனோ அவர்கள் ந ம்பர்களையெல்லாம் போனில் பதிந்துவைத்திருக்கின்றேன் .அவர்கள் அழைக்கும்போது அவர்கள் பெயரோடு வரும் அழைப்புகளைமட்டும் ஏற்றுக்கொள்வேன் .அதை செய்தல் யாரும் ஏமாற்றமுடியாது .காவல்துறை பலவாறு மக்களுக்கு அறிவுறுத்துகின்றது .இதுபோன்ற அழைப்புவிடுத்தால் பெருசுபவர் தகவல்களை உடனே காவல்துறைக்கு தெரிவிக்கவேண்டும் .மக்கள் காவல்துறையை ஏன் நம்புவதில்லை .?


ramesh
டிச 17, 2025 07:28

கண்டிப்பாக நீங்கள் திமுகவை சார்ந்தவராக தான் இருக்க வேண்டும், இவ்வளவு அறிவாக யோசிக்க வேறு யாராலும் முடியாது.


N Annamalai
டிச 16, 2025 22:56

நம் கணக்கில் இருந்து வங்கியில் நேரடியாக பணம் எடுக்க ஆயிரம் கேள்விகள் .அது எப்படி ஆன்லைன் மூலம் கோடிக்கணக்கில் பணம் மாற்ற முடிகிறது .இதற்கு ஒரு சட்டம் இயற்றலாம் அரசு .வங்கிகள் ஒரு முறை ஒரு லச்சம் மேல் பணம் போனால் வங்கி கணக்கை தடுக்கலாம் .உரிமையாளர் நேரில் வந்து kyc எழுதிக் கொடுத்தால் கணக்கை விடுவிக்கலாம் .வங்கிகள் உடன் கூடிப்பேசி நாளை முடிவு செய்ய வேண்டும் .போலீஸ் என்ன தான் செய்வார்கள் .உள்துறை கொஞ்சம் நிம்மதி ஆக இருப்பார்கள் .


ThamizhMagan
டிச 17, 2025 06:03

விவேகமற்ற யோசனை. ஒருவர் தானாக தன் வாங்கி கணக்கிலிருந்து இன்னொரு வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவது அவர் இஷ்டம். அதை தடுக்க அரசாங்கம் யார்? நான் 2 கோடிக்கு கல்யாணத்திற்கு நகை வாங்கி தங்கக்கடைக்கு online மூலம் கொடுத்தால், அது குற்றமா? அல்லது என் மகனின் வெளி நாட்டு படிப்புக்கு 2 கோடி அவன் கணக்கில் போட்டால் அதை அரசாங்கம் தடுக்குமா? ஒவ்வொரு தடவையும் நான் KYC எழுதிக்கொண்டிருக்க எனக்கு என்ன வேறு வேலை இல்லையா? முட்டாள்தனமான யோசனை. பணம் அனுப்புபவர் தன்னிச்சையாக அனுப்புவதை ஒருவரும் தடுக்க முடியாது. சட்டத்தில் இடம் இல்லை.


முக்கிய வீடியோ