உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடங்காமல் இருப்பது நல்லது: சசி தரூர் சொல்கிறார்

அடங்காமல் இருப்பது நல்லது: சசி தரூர் சொல்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' அநீதிக்கு இணங்கி, அடிபணிந்து அல்லது ஒப்புக்கொள்வதை விட, அடங்காமல் இருப்பது மிகவும் நல்லது,''என முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. விவசாயம் உள்ளிட்ட சில சந்தைகளை திறந்து விடும்படி அமெரிக்கா கூறுவதை இந்தியா ஏற்கவில்லை. இச்சூழ்நிலையில், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதிக்க இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெஸ்ஸன்ட் கூறும்போது, '' அமெரிக்க சிறந்த நிலையில் இருக்கிறது. பெரிய வர்த்தக ஒப்பந்தம் இதுவரை செய்யவில்லை. ஒப்புக்கொள்ளப்படவில்லை. சுவிட்சர்லாந்துடன் செய்ய வேண்டி உள்ளது. இந்தியா அடங்க மறுக்கிறது,'' எனத் தெரிவித்து இருந்தார்.இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா அடங்க மறுப்பதாக சிலர் சொல்வதை கேள்விப்படுகிறேன். அநீதிக்கு இணங்கி, அடிபணிந்து அல்லது ஒப்புக்கொள்வதை விட, அடங்காமல் இருப்பது மிகவும் நல்லது என்று நான் சொல்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சசிதரூர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஆக 15, 2025 11:29

இவர் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அடங்காமல் இருப்பது போலவா?


karthik
ஆக 15, 2025 11:46

அமெரிக்காவும் இப்போ அப்படித்தான் முட்டாளாக நடக்கிறது


vivek
ஆக 15, 2025 12:15

பார்ரா அதை சொல்வது வாழ்நாள் கொத்தடிமை


Ganapathy
ஆக 15, 2025 00:46

அடங்க மறு...அத்துமீறு...பொங்கி எழு.....துள்ளி எகிறு...எட்டி உதை...அமெரிக்க பொருள்களை...காறி துப்பு...ட்ரம்ப் மூஞ்சி மேல...


Sun
ஆக 14, 2025 23:17

எங்களை அடக்க நினைப்பதற்கு நீ யார்? அமெரிக்க வியாபாரியே. சபாஷ் சசிதரூர்.உங்களுக்கு இந்திய ரத்தம் முழுமையாக ஓடுவதால் நாட்டிற்கான இழுக்கு என்றவுடன் துடிப்பு வருகிறது. சில வெள்ளைக் காரர்கள் தங்களை தலைவர்கள் என சொல்லிக் கொண்டு நம் நாடு இன்னும் வெள்ளைக் காரர்களுக்கு அடிமையாக இருக்கு வேண்டும் என நினைக்கிறார்கள்.


Ramesh Sargam
ஆக 14, 2025 22:47

நமக்கு பலனில்லாத அமெரிக்காவின் திட்டங்களுக்கு இந்தியா ஏன் அடங்கவேண்டும். அடங்கமறு.


பாரதன்
ஆக 14, 2025 22:41

சபாஷ் சசிதரூர்...


சமீபத்திய செய்தி