உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எனது தவறு தான்…: எதைச் சொல்கிறார் ராகுல்

எனது தவறு தான்…: எதைச் சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' சரியான நேரத்தில் ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாதது எனது தவறு தான்,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:நான் 2004 முதல் அரசியலில் உள்ளேன். நான் பின்னோக்கி பார்த்தால் நான் செய்த தவறு தெரிகிறது.நான் ஓபிசி பிரிவினரை பாதுகாக்கவில்லை. பாதுகாத்து இருக்க வேண்டும். உங்கள் பிரச்னைகளை சரியாக புரிந்து கொள்ள முடியாததே இதற்கு காரணம்.ஓபிசி பிரிவினரின் பிரச்னைகள் தொடர்ந்து மறைக்கப்பட்டு வந்துள்ளது. இதனை எளிதாக பார்க்க முடியாது. ஓபிசி வரலாறு மற்றும் உங்கள் விவகாரங்களை முன் கூட்டியே தெரிந்து இருந்தால், இன்னும் தெரிந்து இருந்தால் சரியான நேரத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியிருப்பேன். இதனை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.இந்த தவறை செய்தது நான். காங்கிரஸ் செய்த தவறு கிடையாது. எனது தவறு. அந்த தவறை சரி செய்யப்போகிறேன். ஒரு வகையில் தவறு நடந்தது நல்லதுதான். அந்த நேரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியிருந்தால், இப்போது நடப்பது போல் நடந்திருக்காது.தெலுங்கானாவில் நாங்கள் செய்தது அரசியல் பூகம்பம். இது இந்திய அரசியல் களத்தில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. நீங்கள் இன்னும் அந்த அதிர்வை உணரவில்லை. ஆனால், பணிகள் நடந்துள்ளன. பெரிய சுனாமி உள்ளது. ஆனால், அந்த சுனாமியை உருவாக்கிய பூகம்பத்தை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை. அது இன்னும் கடலில் உள்ளது. அதன் தாக்கம் தெரிய 2 - 3 மணி நேரம் ஆகும். இதுதான் தெலுங்கானாவில் நடந்துள்ளது. இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

பேசும் தமிழன்
ஜூலை 26, 2025 08:27

பப்பு.... நீ தான் எந்த அரசியல் சாசன பதவியிலும் இல்லையே.... பிறகு நீ எப்படி தவறு செய்து இருப்பாய்.... சரி சரி... அரசின் தலைமை ஆட்களை பொம்மை போல வைத்து கொண்டு.... உங்கள் குடும்பம் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சி செய்தீர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறாராயா ???


M Ramachandran
ஜூலை 26, 2025 01:20

பைத்திய காரன் உளரகள்.


Rajasekar Jayaraman
ஜூலை 25, 2025 23:38

இவர் இந்த ஜென்மத்தில் திருந்த மாட்டார் அவர் திருந்த வேண்டுமானால் சுப்ரீம் கோர்ட் அவருக்கு கொடுக்கும் ஜாமீனை நிறுத்தி வைக்க வேண்டும்.


Anbuselvan
ஜூலை 25, 2025 20:08

கெஜ்ரிவால் ஸ்டைல். ஒர்க் அவுட் ஆகாது


சூரியா
ஜூலை 25, 2025 20:06

இவரின் மடத்தனத்திற்கு ஒரு அளவே இல்லையா? இவர் என்னவோ பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருந்தது போலப் பேசுகிறார்!


Ramesh Sargam
ஜூலை 25, 2025 19:57

ராகுல் எவ்வளவு நேர்மையானவர். அவர் செய்த தவறை உணர்ந்து ஒப்புக் கொண்டிருக்கிறார். அவரைப்போய் விமர்சனம் செய்யலாமா?


Santhakumar Srinivasalu
ஜூலை 25, 2025 19:49

இப்ப எதற்கு மகா நாடகம்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூலை 25, 2025 19:34

பீகார்ல டெபாசிட் கெடைக்காதுன்னு தெரியும்.அதான் இப்பவே ஆரம்பிச்சிட்டோம்


தாமரை மலர்கிறது
ஜூலை 25, 2025 18:59

கோட்டா அரசியலை வெறுப்பதே ஓபிசி மக்கள் தான். ராகுல் அவர்களை எதிர்த்துதான் பேசிவருகிறார்.


பேசும் தமிழன்
ஜூலை 25, 2025 18:53

ஏம்பா பப்பு.... நீ என்ன தான் சொல்ல வாற... தவறு செய்தது நீ... கான் கிராஸ் கட்சி இல்லை.... அதனால் எங்களுக்கு கொள்ளை அடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்கிறாயா.... எங்களுக்கு முதலில் இருந்தே அந்த சந்தேகம் உண்டு.... மன்மோகன் சிங் அவர்களை பொம்மை போல் வைத்து கொண்டு.... உங்கள் குடும்பம் தான் ஆட்சி செய்தது என்று.... அதை இப்போது நீயும் ஒப்புக் கொண்டு விட்டாய்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை