உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சரானார் ஜடேஜாவின் மனைவி; குஜராத் புதிய அமைச்சரவை பதவியேற்பு

அமைச்சரானார் ஜடேஜாவின் மனைவி; குஜராத் புதிய அமைச்சரவை பதவியேற்பு

காந்தி நகர்: குஜராத் அரசின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது. அமைச்சரவையில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா உள்பட 26 பேர் இடம்பெற்றுள்ளனர்.பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் பூபேந்திர படேலை தவிர்த்து, குஜராத் அமைச்சர்கள் அனைவரும் நேற்று கூண்டோடு ராஜினாமா செய்தனர். புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும் என்று அறிவிக்கப்பட்டது. கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், அனைத்து பிராந்தியங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.நேற்றைய அறிவிப்பின்படி, 26 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலை குஜராத் அரசு இன்று காலை வெளியிட்டது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா, ஸ்வரூப்ஜி தாலுர், பிரவின்குமுர் மாலி, ருஷிகேஷ் படேல், தர்ஷ்னா வஹேலா,குன்வர்ஜி பவாலியா, அருண் மோத்வாடியா, பர்ஷோத்தம் சோலங்கி, ஜிதேந்திர வாஹானி, பிரபுல் பன்ஷேரியா, ஹர்ஷ் சங்வி மற்றும் கனுபாய் தேசாய் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். காந்தி நகரில் நடந்த விழாவில், கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மத்திய அமைச்சர் ஜேபி நட்டா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அமைச்சரவையில் இடம்பெற்றவர்களின் முழுவிபரம் பூபேந்திர ரஜினிகாந்த் படேல்திரிகம் பிஜல் சாங்காஸ்வரூப்ஜி சர்தார்ஜி தாக்கூர்பிரவின்குமார் மாலிருஷிகேஷ் கணேஷ்பாய் படேல்பி.சி. பாரண்டாதர்ஷனா எம் வஹேலாகந்தரதலால் சிவலால் அம்ருதியாகுன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியாரிவாபா ரவீந்திரசிங் ஜடேஜாஅர்ஜுன்பாய் தேவபாய் மோத்வாடியாபிரத்யுமன் வாஜாகௌசிக் காந்திபாய் வேகரியாபர்ஷோத்தம்பாய் சோலங்கிஜிதேந்திரபாய் சவ்ஜிபாய் வஹானிராமன்பாய் பிகாபாய் சோலங்கிகமலேஷ்பாய் ரமேஷ்பாய் படேல்சஞ்சய்சிங் ராஜசிங் மஹிதாரமேஷ்பாய் பூராபாய் கட்டாராமனிஷா ராஜீவ்பாய் வகீல்ஈஸ்வர்சிங் தாகோர்பாய் படேல்பிரபுல் பன்சேரியாஹர்ஷ் சங்விஜெய்ராம்பாய் செமபாய் கமித்நரேஷ்பாய் மகான்பாய் படேல்கனுபாய் மோகன்லால் தேசாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

சுந்தரம் விஸ்வநாதன்
அக் 17, 2025 16:39

படேல் ஜாதிக்கு மட்டும் ஐந்து அமைச்சர்களோ?


Barakat Ali
அக் 17, 2025 20:59

அங்கே அது பெரும்பான்மை சமூகம் .....


Alphonse Mariaa
அக் 17, 2025 15:58

காலம் பதில் சொல்லும் . பொறுப்புடன் ஆட்சி நடத்தவும்


Keshavan.J
அக் 17, 2025 15:41

யாரு உதவநிதியா . விளங்கிடும்


Vasan
அக் 17, 2025 15:37

Mrs.Jadeja is a Mechanical Engineer from Ahmedabad Gujarat University. She is already running a NGO for women empowerment. So, she deserves to be a MLA and to be a Minister.


P.sivakumar
அக் 17, 2025 15:23

குஜராத் வளர்ந்து கொண்டே போகிறது! தமிழ்நாடு இருண்டுகொண்டே போகிறது!


Venugopal S
அக் 17, 2025 15:15

எங்கள் தலைவன் விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனதும் த்ரிஷாவுக்கு மந்திரி பதவி கொடுத்து அழகு பார்ப்போம், நாங்களும் செய்வோம்!


Keshavan.J
அக் 17, 2025 16:37

எப்படி உங்க தலைவன் ஒரு மேயரை கொண்டு வந்த மாதிரியா. அது சேரி உங்க உதவாக்கரை எதற்கு பால்டயில் குடிச்சான்.


Barakat Ali
அக் 17, 2025 20:59

மந்திரியாக ஆவாரா அல்லது துணை முதல்வர் அல்லது இணை முதல்வர் பதவி கிடைக்குமா ????


KOVAIKARAN
அக் 17, 2025 15:10

அமைச்சராக பதவியேற்ற அனைத்து புது முகங்களுக்கும் வாழ்த்துக்கள். குறிப்பாக எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா அவர்களின் மனைவி திருமதி ரிவாபா ரவீந்திரசிங் ஜடேஜா அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். குஜராத் மாநிலம் மேலும் மேலும் வளர்ச்சி அடைய அனைவரும் நேர்மையுடன் நல்லவிதத்தில் பணி புரிய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மறந்தும் கூட திராவிட மாடல் ஊழல் ஆட்சியாளர்களை பற்றி கனவிலும் நினைக்காதீர்கள்.


vadivelu
அக் 17, 2025 14:13

அதுவும் குஜராத் மிக நன்றாக விளங்கி இருக்கிறது.


M. PALANIAPPAN, KERALA
அக் 17, 2025 14:09

நல் வாழ்த்துக்கள்


Kailasam
அக் 17, 2025 13:33

நாடு விளங்கும் ..


Keshavan.J
அக் 17, 2025 16:33

தமிழ் நாடு ரொம்ப வெளங்கிடுச்சு 200 ருபீஸ் ஊ பீ


புதிய வீடியோ