உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசா ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் பலி; 50 பேர் காயம்

ஒடிசா ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் பலி; 50 பேர் காயம்

புவனேஸ்வர்: புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 50 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நேற்று முன்தினம் (ஜூன் 27) கோலாகமாக துவங்கியது. புரி ஜெகன்நாதர் வருடாந்திர ரத உற்சவம் ஜூலை 5ம் தேதி வரை நடக்க உள்ளது. காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் ரதயாத்திரைக்கான சடங்குகள் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dkiitw5p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், 3வது நாளான இன்று (ஜூன் 29) அதிகாலை 4:30 மணியளவில் ஸ்ரீ கண்டிச்சா கோவிலுக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக கூடி இருந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக புரி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.இறந்தவர்கள் பிரபாதி தாஸ் மற்றும் பசந்தி சாஹு ஆகிய இரண்டு பெண்கள் மற்றும் பிரேமகாந்த் மஹந்தி என்ற 70 வயது முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.ரத யாத்திரையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜூன் 29, 2025 12:21

திருந்த மாட்டாங்க. நம்ம ஆளுங்க திருந்தவே மாட்டாங்க. ரத யாத்திரை என்றால் லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்று தெரிந்தும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுக்காமல் இப்படித்தான் நம் நாட்டில் பல விபத்துகள் ஏற்படுகின்றன. இனிவரும் நாட்களில் ஏதாவது யாத்திரை, கோவில் விழா என்றால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எடுப்பார்கள் என்று நாம் நினைத்தால் அது நமது தவறு. நம்ம ஆளுங்க திருந்தவே மாட்டாங்க.


Naga Subramanian
ஜூன் 29, 2025 11:57

கட்டுக்கடங்காத கூட்டம் வருமாயின், நடப்பதற்க்கே இடமில்லாத போது , இவ்வளவு பெருமை வாய்ந்த தேரை எப்படி நகர்த்த முடியும் ? ஆகையால் காலத்திற்கு ஏற்ப, இவ்வளவு பெரிய தேரை, தகுந்த துணை இராணுவ உதவியுடன் மக்களை கட்டுப் படுத்தி, மின் மோட்டாரை வைத்து இயக்குவது/நகர்த்துவதுதான் சாலச் சிறந்தது. இது போன்ற வேறு உத்திகளை பற்றி சிந்தித்து, செயல்படுத்திட அரசு முன்வர வேண்டும். நடக்குமா?


அசோகன்
ஜூன் 29, 2025 10:56

மெக்காவில் மக்கள் தரிசனத்திற்கு வந்து இறந்தால் அது மோட்சம். ஆனால் ஹிந்துக்கள் வந்து இறந்தால் கொழுப்பு. நல்ல இருக்குடா உங்க தத்துவம்


ஆரூர் ரங்
ஜூன் 29, 2025 10:24

நேற்று தேர் ஓடும் தெருக்கள் கொள்ளாத அளவுக்கு கூட்டம் வந்து தேரை நகர்த்த முடியாமல் திண்டாடினர். சூரிய அஸ்தமனம் முடிந்த பின்னும் தேரை இழுத்தது தவறு. இன்று மீண்டும் அடங்காத கூட்டம். பக்தர்களை நிறுத்தும் அதிகாரமும் போலீஸ்க்கு இல்லை. மக்களாக திருந்தினால்தான் உண்டு.


பிரேம்ஜி
ஜூன் 29, 2025 10:14

வருத்தமாக இருக்கிறது. அரசு, கோவில் நிர்வாகம், மக்கள் தங்கள் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். இறைவனை வணங்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. கூட்டம் போட்டு கும்பிட வேண்டிய அவசியமில்லை. இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.


sundarsvpr
ஜூன் 29, 2025 09:52

விதியை நம்மால் மாற்றமுடியாது. கூட்ட நெரிசல் இல்லாவிடினும் சாவு ஏற்படாது என்று கூறமுடியாது. நம்முடைய முயற்சியை நிறுத்தக்கூடாது. முயற்சி உண்மையாய் இருக்கும் எனின் ஆண்டவன் விதியை மாற்றுவான் சூரியன் எழுதல் மறைதல் போல் மக்களின் பிறப்பு இறப்பு


புதிய வீடியோ