உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு பங்களா வழங்கியும் மவுனம் காக்கும் ஜக்தீப் தன்கர்

அரசு பங்களா வழங்கியும் மவுனம் காக்கும் ஜக்தீப் தன்கர்

புதுடில்லி: துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த ஜக்தீப் தன்கருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் அவர் மவுனம் காத்து வருகிறார். நாட்டின் துணை ஜனாதிபதியாக 2022 முதல் செயல்பட்டு வந்தவர் ஜக்தீப் தன்கர், 74. கடந்த மாதம் 21ம் தேதி பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது. ராஜ்யசபாவின தலைவராக இருந்த அவர், முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m9hr92sc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அன்றைய தினமே, அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், மத்திய அரசுடனான மோதல் காரணமாகவே, ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதுகுறித்து எந்த பதிலும் சொல்லாமல், அவர் மவுனம் காத்து வருகிறார். அரசு விதிகளின்படி, முன்னாள் துணை ஜனாதிபதி வசிப்பதற்கான பங்களாவை ஒதுக்கும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், ஜக்தீப் தன்கருக்கான பங்களாவையும் தயார் செய்துள்ளது. அதன்படி, டில்லி அப்துல் கலாம் சாலையில் உள்ள, 'டைப் -- 8' பங்களாவை, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஜக்தீப் தன்கருக்கு ஒதுக்கியுள்ளது. இருப்பினும், அந்த பங்களாவுக்கு செல்வது தொடர்பாக எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அரசு விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் துணை ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்களுக்கு, டில்லியில் உள்ள லுட்யென்ஸ் அரசு தோட்டத்தில் டைப் - 8 பங்களா அல்லது அவர்களின் சொந்த ஊரில், 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும். அரசு பங்களாவை ஜக்தீப் தன்கர் மறுத்தால், இவற்றில் ஏதாவது ஒன்றை வழங்கவும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

suresh Sridharan
ஆக 22, 2025 09:50

காங்கிரஸின் கைக்கூலியாக மாறிய மானங்கெட்ட ஜென்மம் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் துரோகி


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 22, 2025 09:05

ராகுலிடம் இந்த மெளனத்திற்கும் ஒரு கதை உண்டு. தமிழக திரைப்பட தயாரிப்பாளர்களை வைத்து திரைப்படம் தயாரிக்க திட்டம் இடலாம். ஒரே நாளில் ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட்டு கோடிக்கணக்கில் பணம் அள்ளலாம் அதுவும் டிக்கெட் விலையை அதிகம் வைத்து வரி கட்டாமல் வருமானம் பெறலாம்.


Subburamu Krishnasamy
ஆக 22, 2025 07:45

Any person shifting his parties affiliations will never be loyal to any party. He is an opportunist power monger and a traitor too


Naga Subramanian
ஆக 22, 2025 07:10

பப்புவையும் ஜக்குவையும் சேர்த்து அருகருகே இடம் கொடுக்கலாம்.


venugopal s
ஆக 22, 2025 06:13

ஏதோ சில காரணங்களுக்காக அவரை ராஜினாமா செய்ய வைத்து, வாயைப் பூட்டி வைத்து விட்டு பிறகு இவர்களே அவர் மௌனமாக இருக்கிறார் என்று குறை சொல்வது நியாயமா?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 22, 2025 07:37

மத்திய அரசு பங்களாவை ஏற்று கொள்வதில் மௌனமாக இருக்கிறார் என்பதை தவிர அவர் பேச முடியாதபடி வாய்ப்பூட்டு போடவில்லை.. அப்படி பேசினால் அவர் காங்கிரஸோடு கூட்டு சேர்ந்து கொண்டு செய்த தகிடு தத்தங்கள் வெளிவந்து விடும்.....மௌனத்திற்கான காரணம் இதுவே....!!!


subramanian
ஆக 22, 2025 07:38

நீதான் அதற்கு காரணம். அவரை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறாய். நீ தேசத் துரோகி .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை