உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் செயல்பாடுகளை பாகிஸ்தான் உடன் ஒப்பிடக்கூடாது: ஜெய்சங்கர்

இந்தியாவின் செயல்பாடுகளை பாகிஸ்தான் உடன் ஒப்பிடக்கூடாது: ஜெய்சங்கர்

புதுடில்லி: இந்தியாவின் செயல்பாடுகளை பாகிஸ்தானுடன் ஒப்பிடக் கூடாது; அப்படி செய்வது நமக்குத் தான் தீங்கு விளைவிக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது; நம் நாட்டின் மிக நீண்ட கால பாதுகாப்பு சவால்கள் பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்புடையவை தான். பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். நல்ல பயங்கரவாதிகள், கெட்ட பயங்கரவாதிகள் என்று சிலர் வகைப்படுத்துவது போல, நல்ல ராணுவம், கெட்ட ராணுவம் என்பதற்கும் பொருந்துகிறது. ஆப்பரேஷன் சிந்தூர் விவகாரத்தில் இந்தியா தெளிவான விதிமுறைகளின்படி செயல்படுகிறது. ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாகவும், விதிகளுக்கு உட்பட்டும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, நாம் செய்வதும், செய்யக் கூடாததும் உள்ளது. எங்களுக்கு என்று விதிகள் மற்றும் நெறிமுறைகள் உள்ளன. நாங்கள் எந்த நடவடிக்கை எடுத்தாலும், நாட்டு மக்களுக்கும், ஊடகங்களுக்கும் வெளிப்படுத்துவோம். இந்தியாவின் செயல்பாடுகளை பாகிஸ்தானுடன் ஒப்பிடுவது நமக்கு தீங்கு விளைவிக்கும், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
டிச 08, 2025 09:37

இந்தியாவில் அரசு பணிகளில் உள்ள தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு அஞ்சுவதை போல பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை கண்டு அந்த நாட்டு அரசு அஞ்சுகிறது.இந்தியாவில் நல்லாட்சி நடப்பது போல சித்தரிக்கின்றனர் பொய்யர்கள்.


முக்கிய வீடியோ