உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரியங்காவுக்கு ஜமாத்-இ- இஸ்லாமி ஆதரவு; கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

பிரியங்காவுக்கு ஜமாத்-இ- இஸ்லாமி ஆதரவு; கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்காவுக்கு அடிப்படைவாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவு இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். வயநாடு லோக்சபா இடைத்தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அனைத்து கட்சிகளும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z48z9j2i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், அடிப்படை வாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி, காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேஸ்புக்கில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்காவுக்கு பின்புலமாக ஜமாத்-இ- இஸ்லாமி அமைப்பு இருந்து வருகிறது. இதில், காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? இதன்மூலம், காங்கிரஸின் மதச்சார்பின்மை என்ற முகமூடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜமாத் அமைப்பினருக்கு நாடோ அல்லது ஜனநாயகமோ முக்கியமில்லை. ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் ஜமாத்-இ- இஸ்லாமி அமைப்பினர் 3 அல்லது 4 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்தனர். அவர்களின் நோக்கமே மார்க்சிஸ்ட் வேட்பாளர் முகமது யூசப் தரிகாமியை தோற்கடிக்க வேண்டும் என்பது தான். ஜமாத் அமைப்பினருக்கு ஒரே ஒரு கொள்கை தான். ஜனநாயக முறையிலான அரசை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதுதான் அவர்களின் சித்தாந்தம். தற்போது அவர்களுக்கு ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஆதரவு தேவை. மதச்சார்பின்மைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், அனைத்துவிதமான மதவெறியையும் எதிர்க்க வேண்டாமா? ஜமாத்-இ-இஸ்லாமியின் வாக்குகளை வேண்டாம் என்று காங்கிரசால் சொல்ல முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.ஜமாத்-இ-இஸ்லாமி ஜம்மு காஷ்மீர் அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Mohan
நவ 09, 2024 20:54

ராகுல், பிறப்பால் முஸ்லீம்களாக இருப்பதால் ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பு ஆதரவு தருகிறது.அவர்களைப்போல் வெறி கொண்டவர்கள் தான் பிரியங்கா மற்றும் குடும்பம். அவர்களுக்கு மதம், பிரியங்காவிற்கு பதவி. இண்டி கூட்டணியில் சேர்ந்த உங்களுக்கு இது தெரிந்தாலும் பரவாயில்லை என்று கூட்டணியில் ஏன் தொடரவேண்டும் ?? உங்களுக்கும் தான் பதவி ஆசை


Velayutham rajeswaran
நவ 08, 2024 20:10

கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு முஸ்லிம் இயக்கம் எதுவும் இல்லையா


பேசும் தமிழன்
நவ 08, 2024 19:20

பப்பு குடும்பத்தின் முக்கிய கூட்டாளிகளே.... பிரிவினைவாத ஆட்கள் தானே... இது ஊர் அறிந்த உண்மை தான்...... பதவி வெறியில்.... அவர்கள் பாகிஸ்தான் ஆட்களின் ஆதரவு கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் .....எப்படியாவது பதவிக்கு வந்து விட வேண்டும் . ...அது மட்டும் தான் அவர்களின் ஒரே குறிக்கோள் !!!


Raj S
நவ 08, 2024 19:17

இத பத்தி இங்க இருக்கற கோண வாயனும் அவன் கட்சி ஆளுங்களும் என்ன சொல்றாங்க?? வாயே திறக்க மாட்டாங்க... ஹா ஹா ஹா


வாய்மையே வெல்லும்
நவ 08, 2024 18:19

டொனால்ட் ட்ரம்ப் ஐ உள்ளேவிடுங்க இந்த ஜமாத்தை பிசுக்கோத்து மாதிரி செஞ்சு லபக்கிடுவார் .


Bvanandan
நவ 08, 2024 15:04

Correct


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 08, 2024 14:03

முதலில் கம்யூனிஸ்ட்கள் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுடன் உள்ள உறவை துண்டித்து கொண்டு பிரனாயி விஜயன் இது பற்றி பேச வேண்டும்.


ram
நவ 08, 2024 13:05

மத தீவிரவாதிக்கு மத தீவிரவாதி சப்போர்ட் இதில் என்ன குற்றச்சாட்டு. கேரளாவில் அமைதி மதத்தை வளத்தவர்களுக்குள் இப்போது போட்டி. இப்படியேய் போனால் இன்னும் கொஞ்ச நாளில் இந்தியா ஒரு முஸ்லீம் தேசமாக போகும். மத்திய அரசு அவர்களை சிறுபான்மை என்ற அந்தஸ்தை உடனடியாக நீக்க வேண்டும்.


Muralidharan raghavan
நவ 08, 2024 11:59

கம்யூனிஸ்ட் கட்சியினர் இஸ்லாமியரின் வாக்குகளை பெறுவதற்கு எவ்வளவோ தாஜா செய்தது. பலஸ்தீன பிரச்சனைக்கு கேரளாவில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் கடைசியில் அவர்கள் முஸ்லீம் லீக் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அணிக்குதான் வாக்களித்தார்கள். வயநாடு தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகம். அங்கு கம்யூனிஸ்ட் தலைகீழாக நின்றாலும் வெற்றிபெறப்போவது இல்லை. மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு வங்கி பிற்பட்டோர் மற்றும் தலித்துகள் தான். கம்யூனிஸ்ட் கட்சி முஸ்லிம்களை தாஜா செய்வதை பார்த்து, கணிசமான பிற்பட்டோர் மற்றும் தலித்துகள் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு வாக்களித்து விட்டனர். கடைசியில் வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டபோது, கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனம் தெரிவித்தார்கள். இந்தியாவில் பாஜக கம்யூனிஸ்ட் மற்றும் சிவசேனா கட்சிகள் மட்டும்தான் வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கட்சிகள்


karthik
நவ 08, 2024 11:40

நீங்க இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை