உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நோட்டாவில் ஹரியானாவை முந்திய ஜம்மு - காஷ்மீர்

நோட்டாவில் ஹரியானாவை முந்திய ஜம்மு - காஷ்மீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தல்களில், 'நோட்டா'வுக்கு முறையே 0.38 சதவீதமும், 1.48 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது தெரிய வந்துள்ளது.இரு மாநிலங்களிலும் நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டு, தலைமை தேர்தல் கமிஷன் முடிவுகளை அறிவித்தது. இதன்படி, இந்த இரண்டு சட்டசபை தேர்தல்களிலும் வாக்காளர்கள் பலர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் 'நோட்டா'வுக்கு ஓட்டளித்தது தெரியவந்துள்ளது.ஹரியானாவில், 0.38 சதவீத வாக்காளர்கள் நோட்டாவுக்கு ஓட்டளித்துள்ளனர்; ஜம்மு - காஷ்மீரில் 1.48 சதவீதம் பேர் நோட்டாவுக்கு ஓட்டளித்துள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2013 முதல், நோட்டாவுக்கு ஓட்டளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Lion Drsekar
அக் 09, 2024 19:53

மொத்தத்தில் எல்லோருமே விரும்புவது நோட்டோவை மட்டுமே ஆனால் உயிருக்கு பயந்து வந்தே மாதரம்


M.COM.N.K.K.
அக் 09, 2024 10:02

நோட்டா என்பது சரியே கொள்ளையடிப்பவர்களும் மக்களுக்கு ஒரு நன்மையையும் கிடையாது என்கிறபோது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சரியானதே.நேர்மையானவர்களை கட்சிகள் தேர்வுசெய்யவேண்டும் அதுதான் சரியானது அதை செய்யாமல் நோட்டாவை தவறானது என்று சொல்வது சரியல்ல


கிஜன்
அக் 09, 2024 09:44

ஜனநாயக கடமையாற்றியதற்காக ...இந்த போட்டோவில் இருக்கும் பாட்டிக்கு நன்றிகள் ...


நிக்கோல்தாம்சன்
அக் 09, 2024 08:55

நோட்டா என்பதனை விடுத்து கட்சி யின் ஏதாவது கட்சியினை தெரிவு செய்துதான் ஆகவேண்டும் என்றும் , நூறு சதவீதம் வாக்கு பதிவானால் மட்டுமே வெற்றியாளர் கணக்கிட படுவார் என்றும் சட்டம் வரவேண்டும்


GMM
அக் 09, 2024 07:09

நோட்டா வை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும். செல்லாத வாக்கினால் ஒரு பயனும் யில்லை. உச்ச நீதிமன்றம் கருத்து நீதிபதிக்கு நீதிபதி மாறுபடும். யாருக்கும் வாக்களிக்க விருப்பம் யில்லை என்றால் சுயேட்சைக்கு வாக்கு. தானே குழு அமைத்து போட்டியிட்டு மக்கள் ஆதரவை பெறலாம்.


Kasimani Baskaran
அக் 09, 2024 05:27

நோட்டா என்பது கோமாளித்தனத்தின் உச்ச கட்டம். யாராவது ஒருவரை தேர்வு செய்வதுதான் ஜனநாயகமே தவிர யாரும் வேண்டாம் என்பது அல்ல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை