உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீர் தேர்தல்களம் விறுவிறு! பல முனைப்போட்டியில் வெல்லப்போவது யார்?

ஜம்மு காஷ்மீர் தேர்தல்களம் விறுவிறு! பல முனைப்போட்டியில் வெல்லப்போவது யார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பல முனைப்போட்டி நிலவும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் 4ம் தேதி பேரணிகளில் ராகுல் கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

முதல்முறை

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக வரும் 18ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. அதற்கான வேட்பு மனு வாபஸ் பெறும் காலக்கெடு முன்னரே முடிந்துவிட்டது.

தீவிரம்

ஓட்டுப்பதிவுக்கு இன்னமும் குறைவான நாட்களே உள்ள நிலையில் பா.ஜ., காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. ஜம்மு பகுதியில் செல்வாக்கு அதிகமுள்ள பா.ஜ., மற்ற பகுதிகளில் சிறு கட்சிகளையும், செல்வாக்குள்ள தனி நபர்களையும் கைகோர்த்து களம் இறங்கியுள்ளது.காங்கிரஸ், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக்கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன. ஆனாலும், 5 தொகுதிகளில், இரு கட்சிகளின் வேட்பாளர்கள், ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சர்ச்சைக்குரிய மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, தனித்துப் போட்டியிடுகிறது. இது மட்டுமின்றி, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தின் கட்சியும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.இவர்கள் மட்டுமின்றி, செல்வாக்குள்ள தனி நபர்கள், அரசு எதிர்க்கும் அமைப்புகளும் வேட்பாளர்களை களமிறங்கி உள்ளனர். இப்படி பல முனை போட்டி நிலவுவதால் ஓட்டுகள் சிதறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் ராகுல் பிரசாரம் குறித்து காங்கிரஸ் தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அங்கு வரும் 4ம் தேதி பேரணிகளில் ராகுல் கலந்து கொள்ள இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

செப்டம்பர் 4

அக்கட்சியின் ஜம்மு காஷ்மீர் தலைவர் தாரிக் அகமது கர்ரா கூறி உள்ளதாவது; ஜம்முவில் உள்ள பனிஹல், காஷ்மீரில் உள்ள தூரு பகுதிகளில் வரும் 4ம் தேதி தேர்தல் பிரசார பேரணிகள் நடத்த உள்ளோம். அந்த பேரணிகளில் ராகுல் கலந்து கொள்கிறார்.

மாற்றம்

பாரத் ஜோடோ யாத்திரைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த யாத்திரையின் பயனாக, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஓட்டுக்கள் கிடைக்கும். நிச்சயம் இம்முறை நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம் என்று கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
செப் 01, 2024 09:47

நாடு எப்படிப்போனால் நமக்கென்ன என்று இருக்கும் காங்கிரஸ் போல பல கட்சிகள் இருக்கும் பொழுது காஷ்மீரில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது ஓவரானது. ஆகவே முக்கியமான பகுதிகளை யூனியன் பிரதேசமாகவே வைத்திருப்பது விவேகம்.


ஆரூர் ரங்
செப் 01, 2024 09:29

யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை. கூட்டணி ஆட்சியும் ஸ்திரமாக இருக்காது. பல அரசு அலுவலர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலைக்கே வராமல் தீவீரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அதாவது நமது வரிப்பணத்தில் நமக்கே எதிரான ஆபத்து. தனியார் ஆலைகளை அமைக்க யாரும் முன்வருவதில்லை என்பதால் வேலையின்மை மிக அதிகம். கட்டாயக் கருத்தடை மட்டுமே நீண்டகால அடிப்படையில் உதவும்.


Nandakumar Naidu.
செப் 01, 2024 08:43

ஒரு இந்தியன் என்ற முறையில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தி அவர்கள் கையில் ஆட்சியை கொடுப்பது என்பது தற்கொலைக்கு சமம். பிஜேபி ஆட்சிக்கு வந்தால் சரி. இல்லையென்றால் தீவிரவாதம் வளரும். இன்னும் 30 வருடங்கள் மத்திய ஆட்சியின் பிடியில் இருப்பது நல்லது.


தத்வமசி
செப் 01, 2024 22:10

நீதிமான்களுக்கு இது புரிய வில்லையே...


Ramesh
செப் 01, 2024 08:33

ஜம்மு காஷ்மீர் மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து தங்கள் தலையில் மண்ணள்ளி போடுவதற்க்கு தயார் நிலையில் உள்ளனர். வாழ்த்து வழங்குகிறோம். எங்கள் பங்கிற்கு ஒரு லாரி மண்ணும் அனுப்புகிறோம்.


Duruvesan
செப் 01, 2024 07:59

காங்கிரஸ் ....நண்பன், வெற்றி நிச்சயம்


A Viswanathan
செப் 01, 2024 14:55

இவரை நம்பி வாக்களித்தால் காஷ்மீர் மீண்டும் தீவிரவாதிகளின் கூடாரமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் காஷ்மீர் மக்களே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை