உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழல்வாதிகள், குற்றவாளிகள் நிறைந்தது நிதிஷ் அமைச்சரவை: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

ஊழல்வாதிகள், குற்றவாளிகள் நிறைந்தது நிதிஷ் அமைச்சரவை: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: முதல்வர் நிதிஷ் குமார் அரசின் புதிய அமைச்சரவை ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளால் நிறைந்துள்ளது என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டினார்.மேற்கு சாம்பரானில் உள்ள காந்தி ஆசிரமத்தில் ஒரு நாள் மவுன உண்ணாவிரதத்திற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாவது: ஜனவரி 15ம் தேதி தனது கட்சி யாத்திரையைத் தொடங்கும். ஜன் சுராஜ் கட்சித் தொண்டர்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் செல்வார்கள். புதிதாக பதவியேற்ற நிதிஷ் குமாரின் அமைச்சரவை ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளால் நிறைந்துள்ளது. அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட தலைவர்கள், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதல்வர் குமார் ஆகியோர் பீஹார் பற்றி மிகக் குறைந்த அக்கறை கொண்டவர்கள். ஊழல் நிறைந்த, குற்றவியல் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளை பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அமைச்சர்களாக்கி உள்ளார். தேர்தலுக்கு முன், தேஜ கூட்டணி வாக்குறுதியளித்த அனைத்தும் பீஹார் மக்களுக்கு கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி