மேலும் செய்திகள்
7.5 ரிக்டர் அளவில் பிலிப்பைன்சில் நிலநடுக்கம்
11-Oct-2025
டோக்கியோ:: ஜப்பான் கடற்கரையை ஒட்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து: கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் வடக்கு பகுதியான இவாட் மாகாணத்தின் கடலோர பகுதியில், நேற்று மதியம் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இவாட் கடற்கரையின் அருகே கடலுக்கு அடியில், 16 கி.மீ., ஆழத்துக்கு இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட 3 மணி நேரம் வரை எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத காரணத்தால், அது விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், இந்நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதங்கள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில், ஒனாகாவா என்ற அணுமின் நிலையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அணுமின் நிலையத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என உடனடியாக அறிவிக்கப்பட்டது.
11-Oct-2025