உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்சார்தம் கோவிலில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்- உஷா தம்பதி வழிபாடு

அக்சார்தம் கோவிலில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்- உஷா தம்பதி வழிபாடு

புதுடில்லி: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மனைவி உஷாவுடன் இன்று (ஏப்ரல் 21) டில்லி வந்தடைந்தார். அக்சார்தம் கோவிலில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்- உஷா தம்பதி வழிபாடு செய்தனர்.அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவர் மனைவி உஷா ஆகியோர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்தனர். துணை அதிபர் வான்ஸை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். டில்லியில் வான்ஸ் குடும்பத்தினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ltf4z0wz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், அவரது மனைவி உஷா, குழந்தைகள், டில்லி அக்சார்தம் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். துணை அதிபர் வான்ஸ் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். அப்போது இரு தரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனை செய்யப்பட உள்ளது.டில்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா உள்ளிட்ட நகரங்களுக்கும் வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதற்கு முன்னர், ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் துணை அதிபராக இருந்த ஜோ பைடன் 2013ம் ஆண்டு டில்லி வந்து இருந்தார். இதன் பிறகு, அந்நாட்டின் துணை அதிபர் தற்போது தான் டில்லி வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Easwar Kamal
ஏப் 21, 2025 18:01

இப்போ இந்திய அமெரிக்கா இருக்கும் பொருளாதார நிலைமையில் இந்த பயணம் தேவையா? மாணவர்கள் விசா ப்ரிச்சனை என்று பல ப்ரிச்சனை உள்ளது. இப்போது இந்த பயணத்தினால் என்ன செய்ய முடியும். டிரம்ப் மீறி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது மீறினால் அடுத்த 4 ஆண்டுகள் காணாமல் போய் விடுவார் எந்த வெனிஸ். இப்போ வந்து இருக்கிறது சுற்றுலா பயணம்.


N Srinivasan
ஏப் 21, 2025 14:02

பத்து ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் இருந்து வரும் அரசு விருந்தினர்கள் எல்லோரும் தாஜ் மஹால் பார்க்க படை எடுப்பார்கள். இப்போது? எல்லாம் நன்மைக்கே ......


Ramesh Sargam
ஏப் 21, 2025 12:22

வாருங்கள். உங்கள் அதிபரிடம் சொல்லி வரியை குறையுங்கள். வரி குறைந்தால், நட்பு வளரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை