உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் 4 அதிகாரிகள் வீடுகளில் நகைகள், கட்டுக்கட்டாக பணம் சிக்கியது

கர்நாடகாவில் 4 அதிகாரிகள் வீடுகளில் நகைகள், கட்டுக்கட்டாக பணம் சிக்கியது

பெங்களூரு : கர்நாடகாவில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த நான்கு அரசு அதிகாரிகள் வீடுகளில், லோக் ஆயுக்தா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். கணக்கில் வராத நகைகள், பணம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்.,ஆட்சி நடக்கிறது. இங்கு, மங்களூரு கனிமம் மற்றும் சுரங்க துறையில் மூத்த புவியியலாளராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணவேணி; மாண்டியாவில் காவிரி உபரிநீர் வெளியேற்றுவது குறித்து தகவல் சேமித்து வைக்கும் மைய நிர்வாக இயக்குனர் மகேஷ்; பெங்களூரு நகர திட்டமிடல் துறை இயக்குனர் திப்பேசாமி, பெங்களூரு கலால் எஸ்.பி., மோகன் ஆகிய நான்கு பேரும், தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து இருப்பதாக, லோக் ஆயுக்தா போலீசாருக்கு புகார்கள் சென்றன.இதையடுத்து, லோக் ஆயுக்தா போலீசார் பல குழுக்களாக பிரிந்து, மேற்கண்ட நான்கு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகளில் நேற்று அதிரடி சோதனையில் இறங்கினர். பெங்களூரு, மங்களூரு, மாண்டியா, சிக்கபல்லாப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களில், 25 இடங்களில் சோதனை நடந்தது. இதில், கணக்கில் வராத நகைகள், பணம், வெள்ளி பொருட்கள், சொத்து ஆவணங்கள் சிக்கின. குறிப்பாக, திப்பேசாமி வீட்டில் மட்டும், 28 தங்க மோதிரங்கள், 23 தங்கச் செயின்கள், 8 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கின.கிருஷ்ணவேணி, சிக்கபல்லாப்பூரில் முதலில் பணியாற்றினார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால், இரண்டு மாதங்களுக்கு முன், மங்களூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். நான்கு பேருக்கும் சொந்தமான இடங்களில், ஏராளமான சொத்து ஆவணங்களையும், லோக் ஆயுக்தா போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.சில தினங்களுக்கு முன்தான், 10 அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி, 22 கோடி ரூபாய் மதிப்பிலான, நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Subash BV
நவ 22, 2024 18:37

Nothing going to happen. Due to loopholes in our Constitution everyone will come out without any scratch. Wait and watch.


raja
நவ 22, 2024 09:33

சூப்பர்..திராவிட மாடலை கர்நாடகாவுக்கு எடுத்து சென்று பின்பற்ற செய்த முதல்வர் ஸ்டாலின் வாழ்க....


வாய்மையே வெல்லும்
நவ 22, 2024 08:25

திமிங்கிலம் அப்படியே வண்டிய தமிழ்நாட்டு பக்கம் திருப்பு. அநேக அல்லக்கை சொம்பு திருடர்களிடம் இருநூறு ரூபா கட்டுகளை அள்ளலாம் . இவிங்களுக்கு வாய்க்கரிசி போடுவது கொட்டாம்பட்டி ஓட்டை மரம் ஆட்களே . பெரிய திருடர்களை டில்லி அரசு பதம்பார்க்கட்டும் .


VENKATASUBRAMANIAN
நவ 22, 2024 07:53

இதுபோல் நிறைய திமிங்கிலங்கள் உள்ளன.


Visu
நவ 22, 2024 07:17

இதுப்போன்ற அதிகாரிகள் நீண்ட ஆயுலோடும் பல உடல் உபாதைகளோடும் வாழ பிராத்திப்போம்


அப்பாவி
நவ 22, 2024 07:09

இந்தியாவிலேயே மிகவும் ஊழல் மிகுந்த மாநிலம் நா அது கர்னாடகாதான். யார் ஆட்சி செய்தாலும் அதிகாரிகளுக்கு பிரச்சனை இல்லை. அவிங்க ஆட்டை தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கும். அதே போல ஊழலில் நம்பர் ஒன் பெங்களூரு. மிகவும் ஊழலான டிபார்ட்மென்ட் BDA மட்டுமே.


J.victor J. Victor
நவ 23, 2024 21:28

ஐயா நான் முன்னாள் ராணுவவீரர் புரம்போக்குநிலத்தில்2007 ஆண்டு வீடுகட்டி வாழ்ந்து வாருகிறேன் வரிகட்டிஇருக்கிறேன் இப்போழது BDAவந்து மிகவும் தொந்தரவு கொடுக்கிறார்கள எங்களை காலி செய்தாலும் செய்வார்கள் உங்களால் எனக்கு உதவி செய்யமுடிந்தால் தயவு சொய்து சொய்யுங்கள் நான்கு பிள்ளைகள் பென்சன் தவிர வருமாணம் இல்லை


J.victor J. Victor
நவ 23, 2024 21:40

தினமலர் செய்திகள் உண்மையிலும் உன்மை உடனடியாக பதில் கிடைக்கும் முழ நம்பிக்கை உண்டு இது உண்மை


Priyan Vadanad
நவ 22, 2024 03:16

இதுவரை ஆட்சி செய்த கட்சி எது?


Palanisamy T
நவ 22, 2024 03:10

தமிழகத்தையும் வென்றுவிடுவார்கள் போல் தெரிகின்றது


சமீபத்திய செய்தி