உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுங்க வரி வசூலிக்கக்கூடாத நகைகள்: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சுங்க வரி வசூலிக்கக்கூடாத நகைகள்: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணி, தான் வைத்திருக்கும் பயன்படுத்திய நகைகளுக்கு சுங்கவரி செலுத்த தேவையில்லை' என, டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சமீபத்தில் துபாயிலிருந்து தாயகம் திரும்பிய பெண் பயணி, 200 கிராம் தங்க நகைகள் கொண்டுவந்துள்ளார். விமான நிலையத்தில் அந்த பெண்ணிடம் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது 200 கிராம் தங்க நகைகள் இருந்ததால், அதற்கு சுங்க வரி செலுத்த வேண்டும் என கூறினர்.அந்த பெண், 'இந்த நகை அனைத்தும் புதிதாக வாங்கியவை கிடையாது. ஏற்கனவே என்னிடம் இருந்தவை. நான் பயன்படுத்தி வருபவை' என்று கூறினார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த சுங்கத்துறையினர், நகைகளை பறிமுதல் செய்தனர். சுங்கத்துறை முடிவில் அதிருப்தி அடைந்த அந்த பெண், டில்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.விசாரித்த நீதிபதிகள் யஷ்வந்த் வர்மா மற்றும் ரவீந்தர் துடேஜா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் வைத்திருக்கும் தனிப்பட்ட, பயன்படுத்திய நகைகள்; வெளிநாட்டுப் பயணத்தில் புதிதாக வாங்கப்படாத நகைகள், சுங்க வரிக்கு உட்பட்டவை அல்ல. அதற்கு சுங்கவரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறிமுதல் செய்யப்பட்ட 200 கிராம் தங்க நகைகளை அந்த பெண்ணிடம் திரும்ப ஓப்படைக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Madhavan
டிச 04, 2024 22:16

இந்த வழக்கின் முழுமையான விவரங்கள் தெரியவில்லை. பொதுவாக இந்தியப் பெண் திருமணமானவராக இருப்பின் தங்கத்தில் தாலிக் கொடி+திருமாங்கல்யம், ஒரு ஜோடி தோடு, இரண்டு கைகளிலுமாக நான்கு வளையல்கள், இவை தவிரவும் ஒரு செயின்/நெக்லஸ் அணிகிறார்கள் என வைத்துக் கொள்வோம். இதைப் பல மத்ய தர குடும்ப்பப் பெண்கள் எப்போதுமே அணிகிறார்கள். இவற்றையெல்லாம் சேர்த்தாலே 15 பவுன் அதாவது 120 கிராம் ஆகி விடும். குறிப்பிட்ட இந்தப் பெண்மணி கொஞ்சம் வசதி படைத்தவராக இருப்பின் 200 கிராம் தங்க நகைகளை எப்போதும் அணிபவராக இருக்கலாம். இதை வைத்துப் பார்க்கும்போது கனம் கோர்ட்டார் அவர்களின் உத்தரவு நியாயமானதாகத் தெரிகிறது. குறைந்த நாட்கள் சுற்றுலா என வெளிநாடு செல்லும் நம் பெண் மணிகள் இங்கிருந்து வெளிநாடு செல்லும்போதே சுங்க அதிகாரிகளிடம் தாங்கள் எப்போதும் அணிந்தபடி இருக்கும் நகைகளைக் காண்பித்து டிக்ளேர் செய்து அதற்கான படிவத்திலோ அல்லது தங்கள் பாஸ்போர்ர்டிலோ பதிவு செய்து கொண்டால் இது போன்ற அனாவசிய சோதனைகளைத் தவிர்க்கலாம்.


kantharvan
டிச 05, 2024 06:07

சுங்க வரி என்பதே ஒரு பாடா வதி விதிதான்? இந்த காலாவதி விதியை நீக்கினாலே அரசின் வருவாய் மிச்சமாகும் . தண்ட கருமந்திர அதிகாரிகளுக்கு மட்டும் வருவாய் இழப்பு.


kalyan
டிச 04, 2024 21:58

இனி வெளிநாடுகளில் மலேஷியா தாய்லந்து சிங்கப்பூரில் எல்லாம் கடைகளில் பயன் படுத்திய நகைகளுக்கு விலை உயரும் . இந்தியர்கள் நாடு திரும்பும்போது அல்லது விடுமுறையில் செல்லும்போதோ வாங்கி செல்வார்கள் அல்லவா ?


GMM
டிச 04, 2024 20:49

பயன்படுத்திய வெளிநாட்டு நகையாக இருந்தாலும் சுங்க வரி செலுத்த வேண்டும். பயன் படுத்துவதை அதிகாரி அறிய முடியாது. பெண் பயணி விமானத்தில் பல ஆயிரம் செலவு செய்து வருகிறார். பல ஆயிரம் வக்கீல் கட்டணம் செலுத்தி வாதிடுகிறார். அரசுக்கு குறைந்த சுங்க கட்டணம் செலுத்த மறுக்கிறார். சிலர் அரசுக்கு எந்த வரியும் செலுத்த விரும்புவது இல்லை. தன்னை சார்ந்த சமூகத்திற்கு மாத பங்கு, சமூக வரி செலுத்த தவறுவது இல்லை.


ameen
டிச 04, 2024 21:31

அந்த சிலர் யார் என்று வருமான வரிதுறைக்கு தகவல் கொடுத்து தேசபக்தியை காட்டாலமே...


Panapathiran
டிச 04, 2024 21:36

என்ன கிறுக்குத் தனமான கருத்து. ஆயிரக்கணக்குல பணம் இருக்குன்னா குடுக்கணுமா? 3% வரின்னாலும் அது என்ன கொறச்சலா? 5 பவுன் நகை வரைக்கும் தான் இந்தியாவுல அனுமதி. ஆனா சில பேரு தெரியாம வளையல், தாலி செயின், கூட ஒரு செயின்னு போட்டுட்டு போயிருவாங்க. திரும்ப வரும் போது இந்த மாதிரி பாடாவதி ரூல் சொல்லி சாவடிப்பாங்க. சென்னை ஏர்போர்ட்ல ஒருமுறை இப்படி தெரியாம மாட்டிக்கிட்ட ஒரு வயசான அம்மாவை போட்டு அலைக்கழிச்சதை கண்ணால பாத்தேன். கடத்தவன் மொகரய பாத்தாலே தெரியாதா இந்த ஆபிஸர்ஸ்க்கு? கமிஷனை வாங்கிட்டு, சிலத கண்டுக்காம இருந்துட்டு, கேஸ் கணக்கு காட்ட எவனாவது இளிச்சவாயன் இருந்தா அவன் மேல பாயறது.


Narayanan Muthu
டிச 04, 2024 19:59

வரி வசூலிக்காவிட்டால் நண்பர்களுக்கு எப்படி பணஉதவி செய்யமுடியும் என்பதையும் யோசிக்கலாம் இல்ல


Anantharaman Srinivasan
டிச 04, 2024 19:36

தனிப்பட்ட, பயன்படுத்திய நகைகள் என்றால் எத்தனை காலத்திற்கு பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏதேனும் வரமுறை உண்டா..?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை