உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்ட் மத்திய சிறையில் கைதிகள் டான்ஸ் வீடியோ வைரல்: சிறை அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்

ஜார்க்கண்ட் மத்திய சிறையில் கைதிகள் டான்ஸ் வீடியோ வைரல்: சிறை அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மத்திய சிறையில் கைதிகள் இருவர் நடனமாடிய வீடியோ வைரலானதை தொடர்ந்து அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் ஹோத்வாரில் பிர்சா முண்டா மத்திய சிறைச்சாலை உள்ளது.இங்குள்ள கைதிகள் இருவர் நடனம் ஆடுவதை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ வைரலானது.அந்த வீடியோவில், நடனமாடியிருப்பது, மதுபான ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விது குப்தா, ஜிஎஸ்டியில் பல கோடி மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விக்கி பலோடியா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சிறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட அறிக்கையில் அலட்சியம் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மை என்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உதவி ஜெயிலர் தேவ்நாத் ராம் மற்றும் ஜமாதர் வினோத் குமார் யாதவ் ஆகிய இரண்டு அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்ய ஐஜி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை