உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக முதல்வருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் ஆதரவு!

தமிழக முதல்வருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் ஆதரவு!

ராஞ்சி: '' மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்வது நியாயமாகவும் சமமாகவும் இருக்காது'' என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டுக்குழு கூட்டம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், மாநில முதல்வர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் என ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 24 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகள் ஒத்தி வைக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அடுத்த கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இக்கூட்டம் தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்த கூட்டத்தை நான் வரவேற்கிறேன். மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்வது நியாயமாகவும் சமமாகவும் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.

ஆய்வு

தொகுதி மறுவரையறை தொடர்பாக ஹேமந்த் சோரன் அளித்த பேட்டியில் கூறியதாவது: இதற்கு முன்பாகவும், தொகுதி மறு வரையறை செய்வதற்கான முயற்சிகள் நடந்தன. மாநிலத்தில் பழங்குடியினருக்கான தொகுதிகளை குறைக்க முயற்சி நடந்தபோது, கடுமையான போராட்டங்கள் நடந்தன.ஏன் பழங்குடியினருக்கான தொகுதிகள் குறைக்கப்பட வேண்டும்? சென்னையில் நடந்த கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பற்றி ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Nandakumar Naidu.
மார் 23, 2025 12:23

ஊழல் ஊழலுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. நம் நாட்டின் கேடுகெட்ட அரசியல் தலைவர்களிள் இவரும் ஒருவர்.


Perumal Pillai
மார் 22, 2025 21:57

தங்கம் , நிலக்கரி , சரக்கு. நல்ல கூட்டணி .


venugopal s
மார் 22, 2025 21:11

பாஜகவின் மதம் , மொழித் திணிப்பு போன்ற அரசியலை வட இந்தியர்களும் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்களே, பரவாயில்லையே!


Velan Iyengaar, Sydney
மார் 22, 2025 22:31

ஆமாம் சரியா சொன்ன கேப்மாரி கோப்பால். அதான் மூன்று முறை ஆட்சியில் வைத்து அழகு பார்கின்றனர். நீ 200 ரூவா வாங்கிட்டு நல்லா யாரோ எழுதி குடுத்ததை சுய புத்தி இல்லமால் எழுதிட்டு போ


GMM
மார் 22, 2025 20:50

எதன் அடிப்படையில் பாராளுமன்ற தொகுதி அளவிட வேண்டும் என்று யாராவது கருத்து சொல்ல முன் வருகிறார்களா. ? திமுக , காங்கிரஸ் வகுத்த எந்த சட்ட முறையும் எப்போதும் குழப்பம் விளைவிக்கும். பிஜேபி நன்கு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். அழிந்து கொண்டு இருந்த திராவிடம் மொழி வெறி அதிகரித்து வென்றது. தற்போது, வடக்கு தெற்கு. கிழக்கு மேற்கு என்று புதிய பிரிவினை கருத்து ?


Venkatesh
மார் 22, 2025 20:50

நல்ல கூட்டனி..... கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் எப்படி ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.... அதை விடக் கேவலம் வந்து கலந்து கொள்வது.. பிஜேபி எதிர்ப்பு என்ற ஒரே கொள்கையை வைத்துக் கொண்டு இந்த கூட்டம் ஆடும் ஆட்டம்.... மக்கள் முட்டாள்கள் அவர்களை ஆட்டு மந்தைகளை போல மேய்த்து விடலாம் என்ற நினைப்பு......


Ramesh Sargam
மார் 22, 2025 19:41

ஸ்டாலின் இவரிடம் ஹிந்தி தெரியாது போடா என்று கூறுவாரா? இப்ப மட்டும் ஸ்டாலின் அவர்களுக்கு ஹிந்தி பேசுபவர்கள் வேண்டுமா ?


Velan Iyengaar, S
மார் 22, 2025 19:32

இதுபோன்றவர்களை ஆட்சியல் அமரவைத்து அழகு பார்க்கும் மக்களுக்கு தலை வணங்குகிறேன்...வாழ்க சனநாயகம்


Anand
மார் 22, 2025 19:22

நீயும் ஒரு சாக்கடை என ஊர் அறியும்....


Visu
மார் 22, 2025 19:04

நமஸ்கார் ஜீ ராகுல்கான்கோ சம்ஜாய்யியே


புதிய வீடியோ