உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் சம்பாய் சோரன் பா.ஜ.,வில் ஐக்கியம்

ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் சம்பாய் சோரன் பா.ஜ.,வில் ஐக்கியம்

புதுடில்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பிப்ரவரியில் அக்கட்சியின் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த ஜூனில் ஹேமந்த் சோரன் ஜாமினில் வெளியே வந்தவுடன், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க வேண்டி சம்பாய் சோரன் பதவி விலகினார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சிலருடன் டில்லி சென்றார் சம்பாய் சோரன், தொடர்ந்து பா.ஜ.,வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாயின. இது குறித்து பதிலளித்த சம்பாய் சோரன், 'அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என எண்ணினேன். ஆனால், அரசியலைவிட்டு விலக வேண்டாம் என்று மக்கள் அளித்த ஆதரவு காரணமாக பா.ஜ.,வில் இணைய முடிவு எடுத்துள்ளேன்' எனக் கூறியிருந்தார். அதன்படி, இன்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் முன்னிலையில் சம்பாய் சோரன் பா.ஜ.,வில் இணைந்தார்.அம்மாநில சட்டசபைக்கு வரும் நவம்பர், டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் பா.ஜ.,வில் இணைந்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

spr
ஆக 31, 2024 10:23

அரசியல்வியாதிகளும் அழைத்தால் வரும் பெண்களும் எவருடனேயும் நிரந்தர உறவு வைத்ததில்லை. ஆனால் இப்படி ஊழல் செய்பவரை கட்சியில் சேர்த்து பாஜக இத்தனை தரம் தாழ்ந்து போய் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா? இது மேலிடத்து முடிவானால், இதனை எதிர்த்து மோடி பதவி விலகினால்தான் மதிப்பு. மூன்று முறை பிரதமராக அமர்ந்தாயிற்று உலகெங்கும் நல்ல பெயரெடுத்தாயிற்று இனியும் இப்படித் தரம் தாழ்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா எதிர்க்கட்சிகள் வலுவிழந்திருக்கும் நிலையில் பாஜக ஆட்சிக்குப் பிரச்சினையில்லை


தாமரை மலர்கிறது
ஆக 30, 2024 19:26

அதிமுக, திமுகவிலிருந்து பல திராவிட கொள்கையை தூக்கி கடாசிய தலைகள் பிஜேபியில் விரைவில் இணைவார்கள்.


J.Isaac
ஆக 30, 2024 18:51

எத்தனை கோடி கைமாற்றமோ?


venugopal s
ஆக 30, 2024 18:24

கழுதை கெட்டால் குட்டிச் சுவர் பக்கம் தானே போகும்!


Oviya Vijay
ஆக 30, 2024 18:18

தாமரைக் கட்சிக்கு இதே வேலையா போச்சு... இது தான் அவங்களோட அழிவுக்கும் காரணமாகப் போகுது.


MADHAVAN
ஆக 30, 2024 17:32

ஹேமந்த் சொரணை கைது பண்ணியது இதுக்குத்தான்,


nagendhiran
ஆக 30, 2024 18:52

செந்தில் பாலாஜி? வேலு? ஜகத்ரச்கன்? மற்றும் மாற்று கட்சியினர் சேவை செய்ய திமுகவிற்கு போனார்களா?


சமீபத்திய செய்தி