உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்ட் நக்சலைட் மூணாறு அருகே கைது; மஹா.,வில் 60 பேர் சரண்!

ஜார்க்கண்ட் நக்சலைட் மூணாறு அருகே கைது; மஹா.,வில் 60 பேர் சரண்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்ராவில் தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பின் தளபதி சோனு என்ற மல்லோஜுலா வேணுகோபால் ராவ் 60 பேருடன் போலீசில் சரண் அடைந்தார். அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். அதேபோல், கேரள மாநிலம் மூணாறு அருகே ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நக்சலைட் சகன்டுட்டி தினபு கைது செய்யப்பட்டார்.நக்சல்கள் நடவடிக்கை முழுவதுமாக அழிக்கப்படும் என்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. நக்சல் அமைப்பினரின் முக்கிய பதுங்கும் இடங்கள் தாக்கி ஒழிக்கப்படுகின்றன. நக்சல் அமைப்பின் முன்னணி தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து நக்சல்கள் சரண் அடையும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன.இந்நிலையில், மஹாராஷ்டிராவின் கட்சிரோலியில் இன்று (அக் 14) நக்சல்களின் வெற்று சித்தாந்தங்களில் வெறுப்படைந்த தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பின் தளபதி சோனு என்ற மல்லோஜுலா வேணுகோபால் ராவ் 60 பேருடன் போலீசில் சரண் அடைந்தார். அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். இது நக்சல் அமைப்புக்கு ஒரு பெரிய அடியாகும். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நாடு முழுவதும் மாநில அரசுகளின் தலைமையில் காவல்துறையினர் மேற்கொண்ட நக்சல் ஒழிப்பு நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ஜார்க்கண்ட் நக்சல் கைது

கேரள மாநிலம் மூணாறு அருகே ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நக்சலைட் சகன்டுட்டி தினபு, 30, கைது செய்யப்பட்டான். இவன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 போலீசாரை வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தான். இவன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மூணாறு வந்து ஒரு தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ